Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 9 ஜனவரி, 2012

சிந்தியுங்கள் தமிழர்களே - பகுதி 7

மக்களே, ஏழாம் அறிவு படம் பார்த்தீர்களா?? எப்படி பார்க்காமல் இருந்திருப்பீர்கள். “ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என்று கூவி கூவி தானே வியாபாரம் செய்தார்கள். அதற்காக தானே, நானும் அந்த படத்தைப் பார்த்தேன். தமிழனின் பெருமையை உலகறிய எடுத்த திரைப்படத்தில் எதற்காக வெளிநாட்டு பாடல் காட்சிகள், எதற்காக கதாநாயகி பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடை அணிந்து இருக்கிறார்கள், தமிழ் வார்த்தைகளை சரியாய் உச்சரிக்க கூட தெரியாத சுருதியை எதற்காக நடிக்க வைத்தார்கள், இறுதி காட்சியில் எதற்காக சூர்யா வேட்டி, சட்டை அணியாமல் வெள்ளைக்காரன் போல் உடை அணிந்து வருகிறார் என்றெல்லாம் பல பேர் கேட்டார்கள். அவை நியாயமான கேள்விகள். ஆனால் அதற்கு இயக்குனரிடமோ, கதாநாயகனிடமோ பதில் கிடையாது.

“எனக்கு திருமணம் என்ற வார்த்தையிலே உடன்பாடு கிடையாது”. இதை யார் சொன்னார்கள் தெரியுமா? முதலில் கமல்ஹாசனும், அதன் பிறகு அவரின் மகள் சுருதிஹாசனும். தமிழினின் பெருமையை எடுத்து சொல்லும் படத்தில், தமிழ் கலாசாரத்தைச் சீரழிக்கும் இந்த சுருதியை நடிக்க வைத்த கொடுமையை எங்கு போய் சொல்வது. குடித்து விட்டு கும்மாளம் போடுவது, திருமணம் செய்யாமல் யார் கூட வேண்டுமானாலும் வாழ்வது ஆகியவை தான் சுருதியின் சிறப்பம்சங்களாகும். எனக்கு தெரிந்து மிருகங்கள் தான் அப்படி வாழும். தமிழ் கலாசாரத்தை தூக்கி எறிந்து விட்டு, மிருகத்தின் கலாசாரத்தில் வாழும் சுருதி ஹாசன் தமிழின் சிறப்பைப் பற்றி, தமிழை உச்சரிப்பில் கொலை செய்து விளக்கும் காட்சிகளில், என்னை போன்றவர்களின் இரத்தம் கொதித்தது.

பணத்திற்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த சினிமாத்துறை(ஒரு சில நல்ல திரைப்படங்களை தவிர்த்து). நியாயம், நேர்மை என்பதெல்லாம் அவர்கள் பார்ப்பது கிடையாது என்பது தெள்ள தெளிவாய் தெரிகிறது. சினிமாவிற்கு அடிமையாகி நம் அருமை கலாசாரங்களை விட்டு விலகி போய்க் கொண்டிருக்கின்றோம். நாம் விழித்துக் கொள்ள வேண்டும் நண்பர்களே. தமிழ், தமிழ் என்று பேசி தமிழை வளர்க்காமல், அவர்கள் வீட்டு கஜானா பெட்டியை மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கும் சினிமாக்கார்கள் பலர்(ஏழாம் அறிவு படக்குழுவை போல்). அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நல்ல படங்களை மட்டுமே ஆதரிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம். (தொடரும்)(பிற பகுதிகளை கீழே காணலாம்)


பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6|
பகுதி 7

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages