உதிக்கும் சூரியன் நிரந்திரம் இல்லை
பால் மழை பொழியும் சந்திரன் நிரந்திரம் இல்லை
மழை நிரந்திரம் இல்லை
வெயில் நிரந்திரம் இல்லை
காணும் காட்சிகள் நிரந்திரம் இல்லை
கேட்கும் ஒலிகள் நிரந்திரம் இல்லை
உறக்கம் நிரந்திரம் இல்லை
நெருக்கம் நிரந்திரம் இல்லை
மயக்கம் நிரந்திரம் இல்லை
தயக்கம் நிரந்திரம் இல்லை
மண்ணும் நிரந்திரம் இல்லை
பொன்னும் நிரந்திரம் இல்லை
போகும் பாதை நிரந்திரம் இல்லை
வாழும் வாழ்க்கையும் நிரந்திரம் இல்லை
எதுவும் நிரந்திரமில்லாத இந்த மாய உலகில்
மகிழ்ச்சி நிரந்திரமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பது மடத்தனம் இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக