இந்த நிலைக்கு சினிமா தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் குடியைப் படிபடியாக திரைப்படங்கள் பிரபலப்படுத்தி வருகிறது. இதன் உச்சம் தான், ”வா, Quarter Cutting" என்ற திரைப்படம். நான் எல்லா திரைப்படங்களையும் தவறாக சொல்லவில்லை. நல்ல படங்களும் வருகின்றன. ஆனால், எத்தனை பேர் அந்த படங்களை பார்க்கிறார்கள், எத்தனை பேர் அதில் உள்ள நல்ல கருத்துகளை பின்பற்றி நடக்கிறார்கள். நல்ல படங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க முடியாத அளவுக்கு மக்கள் மாசுப்பட்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை மாசுப்படுத்தியது யார்? தீய கருத்துகளையும், தீய எண்ணங்களையும் விதைக்கும் திரைப்படங்கள் தானே?
நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, எனது நண்பன் ஒருவன் தீவிர விஜய் ரசிகன். அவன் எப்பொழுது குடிக்க ஆரம்பித்தான் தெரியுமா? விஜய் நடித்து பகவதி என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் “கோக்கோ கோலா பிரவுன் கலர் டா” என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில் விஜய் பீரைக் குடித்து விட்டு ஆடுவது போல் காட்சி அமைந்திருக்கும். அதைப் பார்த்து ரசித்த என் நண்பன், முதன் முதலாக பீர் குடிக்க ஆரம்பித்தான். அப்படி ஆரம்பித்த அவனுடைய குடிப்பயணம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா? இன்று அவன் ஒரு மொடா குடிக்காரன் ஆகி விட்டான். குடித்து, குடித்து அவன் உடல் பருமன் அடைந்து, பார்ப்பதற்கே பரிதாபமாய் இருக்கிறான். உடலின் வெளியே தெரியும் பாதிப்பை விட, உடலின் உள்ளே என்னென்ன பாதிப்பு இருக்கிறது என்பது அவனுக்கு தான் தெரியும்.
ஒரு நடிகனை பார்த்து, விளையாட்டாய் கிளம்பிய குடிப்பழக்கம் இன்று அவனை குடிக்கு அடிமையாக்கி அவன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இவனை போல், இன்னும் பல பேர் தன் ஹீரோக்களைத் திரையில் பார்த்து, குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்துக்கும் அடிமையாகி வருகிறார்கள்.
அஜீத் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜீத் அவர்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவர் குடிப்பதை நியாயப்படுத்தியும், கொள்ளை அடிப்பதை நியாயப்படுத்தியும் தன் சினிமாவில் பேசினால், அவர் ரசிகர்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு அது சீர்குலைக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குற்றங்கள் விண்ணைமுட்டும் அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் ஒரு நடிகனின் கடமை என்னவாக இருக்கவேண்டும்? அந்த குற்றங்களைக் குறைத்து, மக்களை நல்வழிப்படுத்துவது தானே அவர்கள் கடமையாக இருக்க வேண்டும். அதைவிட்டு, அவர்கள் அந்த குற்றங்களை மேலும் அதிகமாக்குவது போல் தானே தங்கள் படங்களில் நடிக்கிறார்கள்.
ஆனால், இதையெல்லாம் நடிகர்கள் உணர மறுப்பது ஏன்?? பணம் மற்றும் புகழ் அவர்கள் கண்களை மறைக்கின்றதா? இதற்கு அரசும் எந்த வித தடையும் சொல்வதில்லை. “நீங்கள் முடிந்தவரை குடிப்பழக்கத்தை பிரபலப்படுத்த வேண்டும். அப்போது தான் எங்களின் டாஸ்மார்க் வருமானம் அதிகமாகி கொண்டே இருக்கும். அதை வைத்து தான் அரசே இயங்கிக் கொண்டு இருக்கிறது”, என்று சொல்வது போல் தானே தெரிகிறது!!(இதன் தொடர்ச்சியைப் படிக்க கீழே பார்க்கவும்.)
பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6| பகுதி 7 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக