கேரளா நம்மிடம் தண்ணீர் இல்லை என்று கூறியபோது, வராத கோபம் இப்போது வந்து என்ன பயன்? உண்மை எது, மாயை என்று உணர வேண்டிய நேரம் இது. சினிமாகாரர்களிடம் நாம் அடிமையாகி சீரழிந்தது போதும். சினிமாகாரர்களை தலையில் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து, நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
சினிமாவும், சினிமாகாரர்களும் மட்டும் நம் வாழ்க்கையில்லை. ஏதாவது ஒரு சினிமாகாரனுக்கு ரசிகன் ஆவதும், அவர் என்ன படம் நடித்தாலும் பிரமாதம் என்று சொல்வதும், படம் நன்றாக இல்லை என்பவரை அடிக்க செல்வதும் மூட்டாள் தனமாக இல்லையா?
தமிழர்களாகிய நாம், நம்முடைய பண்டை பழக்க வழக்கங்களை மறந்து சினிமாவினால் சீரழிந்து போகிறோம். நாகரீகம் என்ற பெயரில் நாளுக்கு நாள நாசமாகி வருகின்றோம். குடிப்பது இக்காலத்தில் சர்வ சாதாராணமாகி விட்டது. “சனிக்கிழமை இரவு முழுக்க முழுக்க குடித்தேன்” என்று பேஸ்புக்கில் ஒருவர் பதிவு செய்கிறார். அதற்கு பல பேர் லைக் செய்கிறார்கள். “ஏன் என்னை கூப்பிடவில்லை என்று பல பேர் கமெண்ட் அடிக்கிறார்கள்”. குடிப்பது நம் வாழ்க்கை முறையில் எவ்வளவு அழுத்தமாக பின்னிக் கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகவே அது காட்டுகிறது. இந்த அவல நிலைமை வருவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தது உண்டா அருமை தமிழர்களே. சினிமாவை தவிர வேறு என்ன காரணம் சொல்ல முடியும்.
எம் ஆர் ராதா இதைப்பற்றி அன்றைக்கே ஒன்றை சொன்னார்.“நடிகர்கள் மோசக்காரர்கள். வரி ஏய்ப்பு செய்பவர்கள். அவர்களை நீங்கள் கடவுள் போல நினைப்பது மூட்டாள் தனம். சிந்தியுங்கள் மக்களே”. நாம் அவர் சொன்னதை கேட்கவில்லையே. இப்பொழுதும் நமக்கு உண்மை விளங்கவில்லையென்றால் அந்த கடவுள் கூட நம்மை காப்பாற்ற முடியாது.
இதற்கு நம் தலைமுறையிலேயே ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையென்றால் நம்முடைய அருமையான கலாசாரம் காணாமல் போவதற்கும், அது மூலம் நம் தமிழ் மொழி அழிவதற்கும் ஒரு பெரிய காரணமாக அமைந்துவிடும்.(இதன் தொடர்ச்சியைப் படிக்க கீழே பார்க்கவும்.)
பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6| பகுதி 7 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக