பெண்கள் சேலை கட்டிக் கொண்டு, பைக்கில்(இரு சக்கர வாகனம்) செல்லும் போது தங்கள் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் வைத்துக் கொண்டு பயணம் செய்வார்கள்.
சேலை கட்டியிருப்பதால், ஆண்களைப் போல், இரு பக்கம் காலை வைத்துக் கொள்ள முடிவதில்லை. சுடிதார், ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இல்லை
ஒரு பக்கத்தில் உட்காருவதால் நிகழும் ஆபத்து என்ன??
வண்டியை ஓட்டுபவர் வண்டியை ஒட்டுவதில் வல்லவராகவே இருக்கலாம். ஆனால் தெருவில் வண்டி ஓட்டும் அனைவரும் அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா?
அதனால் நாம் சரியாக வண்டியை ஓட்டினாலும், விபத்துகளைத் தவிர்க்க முடியாது. எனவே விபத்து ஏற்பட்டாலும், உயிருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும்??
பின்னால் உட்கார்ந்து இருப்பவரும், தலைகவசம் அணிய வேண்டும். ஏன் அணிய வேண்டும்?
பின்னால் பெண் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் போது, ஒரு வேளை தன் வண்டியை வேறு எவறாவது லேசாக இடித்து விட்டால் வண்டியின் balance போய் சாயத் தொடங்கும். அப்படி சாயும் போது, வண்டியை ஓட்டுபவர், சாய்வதை உணர்ந்து தன் காலால் அதை தாங்கிடுவார். அவர் காலால் தாங்குவதற்கு முன், பின்னால் அமர்ந்திருக்கும் பெண், balance இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவார்.
அப்படி விழும் போது, அவர் தலையில் அடிப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தலையில் அடிப்பட்டு, நினைவாற்றல் இழந்து பின்னர் உயிர் இழந்தவர்களும் உண்டு.எனக்கு மிகவும் நெருங்கிய சொந்தத்தில் ஒருவருக்கு இந்த கோர சம்பவம் நிகழ்ந்து அநியாயமாக உயிரை இழக்க நேர்ந்தது.
இன்னுமொரு உறவினர்(பெண்), இதே போல் விழுந்து, தலையில் அடிப்பட்டு கோமாவில் சில நாட்கள் இருந்து, கடவுள் அருளால் உயிர் பிழைத்து வந்தார். இது போன்று இன்னுமொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதை எழுதுகிறேன். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
1) சேலைக் கட்டியிருக்கும் போது, வண்டியில் பின் ஒரு பக்கமாக உட்கார்ந்து பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். உடையை மாற்றிக் கொண்டு பயணம் செய்யலாமே! அதற்கு வழி இல்லாத பட்சத்தில், தலை கவசம் அணிந்து கொண்டு பயணம் செய்யலாம். அதுவும் இல்லையென்றால், காசு போனால் போகட்டும் என்று ஆட்டோ அல்லது டாக்சியில் பயணம் செய்யுங்கள். காசுக்காக பார்த்து, விலை மதிப்பில்லாத உயிரை இழந்துவிடக்கூடாது.
2) கைக் குழந்தையுடன் பயணம் செய்யும் போது, தலைகவசம் அணிந்தாலும், ஒரு பக்கமாக உட்கார்ந்து பயணம் செய்ய உட்காரவே கூடாது.
பெண்கள் சேலை அணிவதைத் தான் ஆண்கள் விரும்புவார்கள். அவர்கள் விருப்பத்துக்கு எதிராக நீங்கள் ஜீன்ஸ் அணிந்து செல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சேலை உடுத்திக் கொண்டு பயணம் செய்தாலும், மேற்சொன்னபடி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். அது தானே புத்திசாலித்தனம்.
“வரும் முன் காப்போம். உயிரைக் காப்போம்”
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
பெண்களே, சேலையில் பைக்கில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதை..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக