Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

யாவரும் நலம் - நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

யாவரும் நலம்

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்!! சில வருடங்களுக்கு முன், அலுவலகத்தில் டீம் லிடருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, சத்யம் தியேட்டர் போன போது, வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. அன்று தான் யாவரும் நலம் படம் வெளியாகிறது. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாத காரணத்தால், முதல் காட்சி டிக்கெட் கிடைத்தது. வேறு வழியில்லாமல் போனேன். ஆனால், காட்சிகள் செல்ல, செல்ல இது போன்று ஒரு பேய் படத்தை யாருமே பார்த்திருக்க முடியாது என்று உணர்ந்தேன். ஒட்டு மொத்த மக்களும் மிகவும் உன்னிப்பாக படத்தைப் ரசித்து பார்த்தார்கள். இறுதியில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இதுவரை ஆறு முறைப் பார்த்திருக்கிறேன். சற்றும் அலுக்கவில்லை. அருமையான படம். மாதவன் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கும் படம். இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி!!

நீங்கள் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால், கண்டிப்பாக பாருங்கள்.

படத்தை இங்கே பார்க்கவும்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages