மதங்கள் பல இருக்கலாம். ஆனால் இறைவன் ஒன்று தான்.
குணங்கள் பல இருக்கலாம். ஆனால் இனம் ஒன்று தான்.
ரணங்கள் பல இருக்கலாம். ஆனால் அதை தாங்கும் இதயம் ஒன்று தான்.
ஆசைகள் பல இருக்கலாம். ஆனால் அதை உருவாக்கும் மாயை ஒன்று தான்.
ஒலிகள் பல இருக்கலாம். ஆனால் அதை கேட்கும் காதுகள் இரண்டு தான்.
ஒளிகள் பல இருக்கலாம். ஆனால் அதை பார்க்கும் கண்கள் இரண்டு தான்.
நாட்கள் பல இருக்கலாம். ஆனால் பொழுதுகள் இரண்டு தான்.
உறவுகள் பல இருக்கலாம். ஆனால் தாய் தந்தை ஒன்று தான்.
பொய்கள் பல பேசலாம். ஆனால் உண்மை ஒன்று தான்.
காதல் பல செய்யலாம். ஆனால் திருமணம் ஒன்று தான்.
நேரம் ஒடிக் கொண்டே இருக்கலாம். ஆனால் கடிகாரம் ஒன்று தான்.
பாதைகள் பல இருக்கலாம். ஆனால் பயணம் ஒன்று தான்.
நிறைய எழுத வேண்டும் என்று என் மனம் நினைக்கலாம்.
ஆனால் எழுதவது எப்பொழுதோ ஒன்று தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக