இதற்கு அவர் ரசிகர்கள் பேஸ்புக்கில் என்ன என்ன பதிவு செய்கிறார்கள் தெரியுமா?
“என் தலைவர் STR வாழ்க”
“STR இன் இந்த முயற்சிக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். தமிழனின் பெருமை உலகம் முழுவதும் பரவினால், தமிழர்கள் அனைவருக்கும் பெருமை”
“உலக மக்களை, தமிழன் STR திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். நன்றி தலைவா”
எனக்கு ஒரே ஒரு சந்தேகம். தமிழர்கள் அனைவரும் இவருக்கு எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழின் பொக்கிஷங்களான சிலப்பதிகாரம் அல்லது தொல்காப்பியத்திற்கு எளிய தமிழ் உரை எழுதினாரா? தமிழில் நாவல் ஏதாவது எழுதினாரா? தமிழில் கவிதை தொகுப்பு வெளியிட்டாரா? அல்லது இவர் படத்தில், அனைத்து வசனங்களும் தமிழில் இருந்ததா? இதில் ஏதாவது ஒன்றை செய்திருந்தால், தமிழ் மீது அவர் வைத்திருக்கும் பாசத்திற்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் முழு ஆதரவு கொடுத்திருப்போம்.
ஆனால் இப்போது, ஒரு பாடலில் ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறது என்பதற்காக நாங்கள் ஏன் இவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஒரு வார்த்தை தமிழ் சேர்த்தாலே, அவன் தமிழ் ஆர்வம் மிகுந்தவன் என்று கேவலமாய் நினைக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
அது சரி, எதற்காக இந்த பாடல் எழுதினாராம்?
உலக அமைதிக்காக, காதல் என்ற வார்த்தையை பல மொழிகளில் இருந்து எடுத்து, கோர்த்து, இதை உருவாக்கி இருக்கிறாராம்.
உலக அமைதி இருக்கட்டும், தம்பி சிம்பு உள்ளூரில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமைதி காண ஏதாவது முயற்சி செய்தாரா? என்று கேட்டால், “ஒன்றும் இல்லை” என்று தான் சொல்ல வேண்டும். அப்புறம் எதற்காக உலக அமைதியைப் பற்றி நினைப்பு.
எல்லாம் காசுக்காக போடும் வேஷம், புகழ் வேண்டி செய்யும் நாடகம். நடிகர்கள் வீசும் இந்த வலைகளில் நாம் விழக் கூடாது. சினிமாவைப் பற்றியும், சினிமாகாரர்களையும் பேசுவதற்காக மட்டுமே நாம் வாழ்கிறோமா. வேறு கடமைகள் ஏதும் இல்லையா. வேறு பொழுதுபோக்கு ஏதும் இல்லையா. ஏன் இல்லை? கிணற்று தவளை போல் இல்லாமல், சற்று வெளியே வர வேண்டும். தெரிந்துக் கொள்ள இந்த உலகத்தில் பல அறிய விசயங்கள் இருக்கின்றன. சினிமா என்னும் போதையில் சிக்கி தவிப்பதை நம் தலைமுறையுடன் நிறுத்த வேண்டும் நண்பர்களே. (இதன் தொடர்ச்சியைப் படிக்க கீழே பார்க்கவும்.)
பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6| பகுதி 7 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக