வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873)சிதம்பரத்தில் இருந்து 10மைல் தொலைவிலுள்ள மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.இது ஆறு திருமுறைகளாக பகுக்கபட்டு உள்ளது.திருஅருட்பா முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமை சீடர் தொழுவூர் வேலாயுதனார் அவர்களால் நான்கு திருமுறைகள் வெளியிடப்பட்டது.பின்னர் ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டது. இவரது உரைநடை, கடிதங்கள், யாவும் தொகுக்கப்பெற்றுத் தனி நூலாக முன்னாள் அறநிலையத்துறை ஆணையாலர் உயர்திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார். (நன்றி - விக்கிபிடியா)
வள்ளலார் அவர்களின் ஒரு பாடலை(ஒலி வடிவில்) இணைத்து இருக்கிறேன். படிப்படியாக நிறைய பாடல்கள் இங்கு இணைக்கப்படும். பக்தி பரவசத்தைத் தரும் இப்பாடல்களைக் கேட்டு இறை சக்தியை உணர்ந்து, ஆனந்தமாக வாழ்வோம்.
1) கருவில் கலந்த
1 கருத்து:
வள்ளலார் என்ன தவம் செய்தார் நமக்கு என்ன தவத்தை அருளினார்?
நினைந்து நினைந்து ....
இங்கே சொடுக்கவும்
-அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி-
கருத்துரையிடுக