Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 21 ஜனவரி, 2012

பரபரப்புடன் விற்றனவா பாரதியாரின் நூல்கள்?

பரபரப்புடன் விற்றனவா பாரதி நூல்கள்?
-செ.திவான்

பாரதி மறைவிற்குப் பின் பாரதி நூல் களையெல்லாம் பிரசுரிக்க வேண் டும்; இந்நூல்களின் விற்பனை மூலம் பாரதி குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று எண்ணினர். 1921 செப்டம்பரிலேயே சென்னையில் கூடிய பாரதி நண்பர்கள் சோம தேவ சர்மா உள்ளிட்டதொரு கமிட்டியை நிறுவினார்கள். நண் பர்களும் உதவினர்; தமிழ் மக்கள் 12 ரூபாய் வீதம் முன்பணம் அனுப் பினர்; திலகர் ஸ்வராஜ்ய நிதியி லிருந்து ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. ரங்கூன் தமிழ் அன்பர்கள் கொஞ்சம் நிதி அனுப்பினர்.

பாரதியின் மனைவி செல்லம் மாளும், மைத்துனர் அப்பாத்துரை யும் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ‘பாரதி ஆசிரமம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பாரதி நூல்களை வெளியிட்டனர்.

பாரதியின் ‘ தேசிய கீதங்கள்’ இரு பாகங்கள் ‘ குயில்’ ‘கண்ணன் பாட்டு’ ‘பாரதி அறுபத்தாறு’ மூன் றும் அடங்கிய நூலும் வெளியா யின. நூல்களின் விற்பனை அவ்வ ளவாக இல்லை. அதன் பின் வர இருந்த நூல்கள் வரவில்லை.

பாரதி இருந்த காலத்தில் அவ ருக்குப் பொருளுதவி செய்தவர்; பாரதியை கானாடுகாத்தானுக்கு அழைத்துச் சென்று உபசரித்து அங்கேயே குடும்ப சகிதம் நிரந்தர மாய் வசிக்கும்படி வேண்டிக் கொண்டவர் வை.சு. சண்முகம். பாரதி மறைவிற்குப்பின், அவரது குடும்பத்தின் சிரமத்தைப் போக் கும் வகையில், பாரதி நூல்களின் உரிமைக்கு ரூ. 10,000 கொடுத்திட வும், அதனை முறைப்படி பிரசுரித் திடவும் முயன்றார். இதற்கு செல் லம்மாள் பாரதி சம்மதித்தார். ஆனால் அவரது தமையனார் ஆர் வம் காட்டாததால் அந்த ஏற்பாடு நடைபெறவில்லை.

1923 ஆம் ஆண்டுக்குள் ‘பாரதி ஆசிரம்’ நூல் பதிப்பு வேலை நின்றே போயிற்று. நூல்களின் விற்பனையும் நடைபெறவில்லை.

விற்பனையாகாமல் முடங்கிக் கிடந்த பாரதி நூல்களின் பிரதி களை, பாரதியின் ‘ இந்தியா’ பத்தி ரிகையில் பணியாற்றிய வி. ஹரி ஹர சர்மாவிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த நூல்களை விற்று பாரதி யின் குடும்பத்திற்கு மாதம் ஒரு தொகை தருவதற்கு ஏற்பாடு ஆயிற்று.

பாரதி நூல்களின் உரிமைகளை விற்பது பற்றி பேச்சு திரும்பவும் எழுந் தது. இப்போது ரூ. 3500க்கு மேல் தர யாரும் முன்வரவில்லை. அதையும் தவணை முறையில் தருவதாகவே சொன்னார்கள்.

ஹரிஹரசர்மாவும், பாரதியார் தம்பி சி. விசுவநாதனும் பாரதியின் இளைய புதல்வி சகுந்தலாவின் திரு மணத்திற்காக பாரதி நூல்களை வைத்து ரூ.2000 கடனாகப் பெற்றார்கள்.

பாரதி அன்பர் பூ. சுப்புராஜா 1924 - ல் 2000 ரூபாய் நன்கொடை அளித்தார். திருமணம் நடந்தேறி யது.

ஹரிஹரசர்மா, சி.விசுவநாதன், சகுந்தலாவின் கணவர் நடராசன் மூவரும் சேர்ந்து ‘ பாரதி பிரசுரால யம்’ அமைத்தனர். பாரதி நூல்க ளின் உரிமை பாரதி குடும்பத்தாரி டமே இருக்க, பாரதி நூல்களை வெளியிடும் பணியை பாரதி பிரசு ராலயம் மேற்கொண்டது.

திருவல்லிக்கேணி பாரதி ஆசிரமம் வெளியிட்டுள்ள பாரதி ‘தேசிய கீதங்கள்’ இரண்டு பாகங் களும் பர்மா மாகாணத்தில் நுழையக் கூடாதென்று 1928 ஆகஸ்ட் 7ல் பர்மா கவர்னர், தடைபிறப்பித்தார். இந்தியாவில் ஒரு மாகாணமாக இருந்த பர்மா அரசாங்க உத்தரவு சென்னை அரசாங்க கெஜெட்டில் வெளியாயிற்று. திருவல்லிக்கேணி தலையாரி தெருவிலிருந்து பாரதி ஆசிரமமும், பாரதி நூல்களை விற்று வந்த ஓ.என். தண்டபாணி கம்பெனியும் சோதனைக்குள்ளா யிற்று. பாரதியாரின் நூல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சட்டசபையில் 1928 அக்டோபர் 9ல் ஒத்தி வைப்பு பிரேரணை (தீர்மானம்) கொண்டு வரப்பட்டது.

பாரதி குடும்பத்தார் பாரதி நூல்களின் உரிமைகளை 4000 ரூபாய்க்கு பாரதி பிரசுராலயத்திற்கு 1931ல் விற்றனர்.ஏற்கெனவே பாரதி யின் இளையமகள் சகுந்தலாவின் திருமணச் செலவுக்காக வாங்கிய கடன்களைத் தீர்க்கவும், மீதித் தொகையைத் தவணைகளில் செல் லம்மாளிடம் தரவும் ஒப்பந்தமா யிற்று.

பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமை ஸரஸ்வதி ஸ்டோர் வெளியிட்டு வந்த ‘பிராட்காஸ்ட்’ ரிக்கார்டுகளுக்காக 400 ரூபாய்க்கு, ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் வாங்கப் பெற்றது.

பாரதி நூல்களின் விற்பனை யினால், செல்லம்மாள் பாரதிக்கு தக்க லாபம் எதுவும் கிடைக்க வில்லை என்றும், செல்லம்மாள் வறுமையில் வாடுவதாயும், பாரதி பிரசுராலயம் குறித்த தவணைகளில் பணம் அனுப்பவில்லை என்றும், விவரம் தெரியாமல் நூல்களின் உரிமைகளைக் கொடுத்துவிட்ட தாயும், நூல்களின் விற்பனையால் கிடைக்கும் லாபத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்றும் செல்லம் மாள் பாரதி கோரிக்கை வைத்தார்.

கவிச் சக்கரவர்த்தி ‘சுப்பிர மணிய பாரதி சரித்திரம்’ எனும் நூலை எழுதியவரான (புத்தக வடிவில் வெளிவந்த முதல் பாரதி சரித்திரம் இதுவாகும்) ஆக்கூர் அனந்தாச்சாரி போன்றவர்கள் செல்லம்மாவிற்காக ஆதரவுக் குரல் கொடுத்தனர்.

பாரதியின் மகள் சகுந்தலாவின் கணவர் நடராசன் பாரதிபிரசுரால யத்திலிருந்து விலகிக் கொண்டார்.

ஹரிஹரசர்மாவும் 1941 ல் விலகிக் கொண்டார். பாரதி பிரசு ராலயம் பாரதி தம்பி விசுவநாத னின் தனிப்பொறுப்புக்கு வந்தது.

பாரதி நூல்களை அரசுடைமை யாக்க வேண்டுமென்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்தது. சென்னை மாகாண முதன்மந்திரி ஓமந்நூர் பி. ராமசாமி ரெட்டியார் நடவடிக்கை எடுத்தார். 1949 ஆம் ஆண்டில் பாரதி பிரசுராலயத்திடமிருந்த பதிப்புரிமையை சி. விசுவநாதனிட மிருந்து அரசாங்கம் விலைக்கு வாங்கியது. பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு 10,000 ரூபாயும், பாரதியின் புதல்வியார் தங்கம் மாள், சகுந்தலா இருவருக்கும் தலா 5000 ரூபாயும் வழங்கப்பட்டது.

பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையை ஏ.வி. மெய்யப்ப செட்டி யார் இலவசமாகவே வழங்கினார். பாரதியார் பாடல்கள் நாட்டு டைமை ஆயிற்று.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages