இது சினிமா, அரசியல், பெண்கள், கிரிக்கெட் தொடர்பானது இல்லை. எனவே பிடிக்காதவர்கள், இங்கேயே இந்த பக்கத்தை மூடி விடுங்கள். நன்றி!!
நிலையில்லாத வாழ்க்கையில்
எதை நீ தேடுகிறாய்?
மண்ணைத் தேடுகிறாய்
பொன்னைத் தேடுகிறாய்
பெண்னைத் தேடுகிறாய்
இதெல்லாம் தேடல்
என்று உனக்கு சொல்லியது யார்?
இதெல்லாம் நிரந்திர மகிழ்ச்சி தரும்
என்று உனக்கு சொல்லியது யார்?
இதெல்லாம் நிரந்திர மகிழ்ச்சி இல்லை
என்று புரிந்த பிறகும்
அந்த தேடல்களிலே இருக்க சொல்லியது யார்?
உன்னுள் இருக்கும் இறைவனை
ஏன் உணர மறந்தாய்?
நிலையான அந்த சக்தியை
ஏன் உதாசினப் படுத்துகிறாய்?
நீ வெறுத்தாலும் உன்னை
உயிர் சக்தியாய் இருந்து இயக்கும் சக்தியை
நீ ஏன் மதிக்க மறந்தாய்?
மண்ணுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும்
யார் யாரிடமோ கைகூப்பி வணங்குகிறாய்.
ஏன் உன்னுள் இருக்கும் இறைவனை வணங்க மறுக்கிறாய்?
காலம் உணர்த்தும்
உண்மையை உணர்த்தும்
வாழ்ந்த வாழ்க்கை மாயை என்று உணர்த்தும்
வாழப் போகும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும்
யாரை வணங்க வேண்டும் என்று உணர்த்தும்
யாரை புகழ வேண்டும் என்று உணர்த்தும்
யாரிடம் உன்னை ஒப்படைக்க வேண்டும் என்று உணர்த்தும்
(மாபெரும் தேடலில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக