விஞ்ஞானத்தில் நாளுக்கு நாள் எவ்வளவோ முன்னேற்றங்கள் நிகழுகிறது. ஆனால் ஒன்று மட்டும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டு நிற்கிறது. “மரணத்திற்கு பின் என்ன?” என்பது தான் அது. ஒரு மின்விசிறி, மின்சாரம் இல்லாமல் போனால் நின்று விடுகிறது. அது போல் உயிர் போனால், மனிதன் பிணமாகி எல்லாம் அங்கு முடிந்து போகிறது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.
இறந்த பின் என்னவோ நடக்கிறது என்பது பெரும்பாலானவர்களின் மனதிலும் இருக்கும் கருத்து. ஆனால் அதை நிருபிக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறந்த பின் நம்முடைய ஆத்மா(மனது) மட்டும் வாழுமானால், நாம் செய்த பழி பாவங்களை எண்ணி அது வருந்துமே. அந்த நிலை நமக்கு வரக்கூடாதே.
அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும். பிறருக்கு கெடுதல் நினைக்காமல் வாழ வேண்டும். ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ வேண்டும். வாழ்வில் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்க வேண்டும். அனைவரையும் சந்தோசப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், நாம் மரணத்திற்கும் பயப்பட தேவையில்லை.மரணத்திற்கு பின் இருக்கும் வாழ்வை நினைத்தும் அச்சப்பட தேவையில்லை. மரணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு ஆவலுடன், மகிழ்ச்சியுடன் மரணத்தைச் சந்திக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக