“ஐயா, எங்கள் மக்கள் முல்லை பெறியாறு அணை தண்ணீருக்காக போராடுகிறார்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தடுக்க போராடுகிறார்கள்.இந்த நிலையில் விருந்துக்கு வருவதற்கு என் மனம் விரும்பவில்லை. என்னை மன்னிக்கவும். எங்கள் மக்களின் பிரச்சனைகளை விரைவில் நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்றல்லவா சொல்லிருப்பான்.
ஆனால் என்ன நடந்தது. இந்த சினிமாகாரர்களின் உண்மையான குணம் இப்பொழுதும் நமக்கு விளங்கவில்லை என்றால், நம்மை விட பெரிய முட்டாள்கள் யாரும் கிடையாது.
இன்று தனுஷ் அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார். ஏதாவது , ஒரு பேட்டியிலாவது, அவர், “முல்லை பெரியாறு அணை பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும்” என்று கூறியதுண்டா? தலை கால் புரியாமல் தானே ஆடிக் கொண்டு இருக்கிறார்.
”அல்பத்திற்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிக்கும்”, என்ற பழமொழிக்கு ஏற்ப, எல்லா தொலைக்காட்சிக்களுக்கும் பேட்டி கொடுப்பதும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், குடித்து விட்டு ஆட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார். இதற்கு எல்லாம் உச்சமாக, இவர் ஒரு ஹிந்தி படத்தை இயக்கப் போகிறாராம். அதற்கு தான், அவர் தன்னை மேலும் மேலும் வட இந்தியாவில் பிரபலப்படுத்திக் கொள்வதற்கு காரணமாம்.
“ஏன் இந்த கொலவெறி” ஐயா, உங்கள் கதைக்கு ஏற்ற கதாநாயகன் தமிழ் நடிகர்களில் இல்லையா. கண்டிப்பாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஏன் இந்த ஆசை. ஆசைப்படுவதில் தவறே இல்லை. ஆனால், தமிழ் மொழியை அவமானப்படுத்தி,பெயர் வாங்க நினைப்பது தவறு தான். தாய்மொழி தமிழை கொன்று பிரபலம் அடைவதும், இந்தியில் படம் இயக்கப் போவதும், உங்கள் தமிழ் மொழி பற்றைத் தெள்ள தெளிவாய் காட்டுகிறது. போகட்டும். எவ்வளவு காலத்திற்கு தான் உங்கள் ஆட்டம் என்று பார்ப்போம். மக்கள் விழித்து கொள்ளும் வரை தான் உங்களுக்கு நல்ல காலம்.
விழித்திருங்கள் மக்களே. போதும் இந்த சினிமா மோகம்.(இதன் தொடர்ச்சியைப் படிக்க கீழே பார்க்கவும்.)
பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6| பகுதி 7 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக