அம்மாவுக்கும், அப்பாவிற்கும், குழந்தைக்கும் இடையில் இருக்கின்ற உணர்வு அன்பு. அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் இருக்கின்ற உணர்வு அன்பு. இது போல் அனைத்து மக்களுக்கும் இடையில் இருக்கும் உணர்வு அன்பு.
அப்படியென்றால் காதல் என்றால் என்ன?
காதல் = அன்பு + காமம்.
ஆணும், பெண்ணும் ஒரு வயதை அடையும் போது, அவர்கள் உடலிலும், மனதிலும் ஒருவித மாற்றம் ஏற்படும். அப்போது காமம் என்ற ஒரு உணர்வு ஏற்படும். ஒரு ஆண் பெண் மீதோ, ஒரு பெண் ஆண் மீதோ, ஆசைப்பட்டு, அன்பாலும், காமத்தாலும் இணைவது தான் காதல் என்பதாகும்.
ஆனால், இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு காதல் என்பதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா?
காதல் = காமம்
அன்பு காணாமல் போய்விட்டது. அன்பு இல்லாத காதல், காதலே இல்லை என்பதை மறந்து கலாச்சாரத்தை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தது உண்டா? சினிமாவை தவிர வேறு எதை சொல்ல முடியும்.
“தீ பிடிக்க, தீ பிடிக்க என்னை தொடு டா”
“கட்டிப்பிடி, கட்டிப்பிடி டா”
இதைப் போன்று இன்னும் எத்தனையோ பாடல்கள் ஒரு இளம் ஆண், பெண் மனதின் ஓரமாய் நின்று கொண்டிருக்கும் காம உணர்வை தூண்டிவிட்டு, அவர்கள் மனதை சிதைத்து, திருமணத்திற்கு முன்னரே அவர்களை தவறு செய்ய வைக்கிறது.
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றால் அது கலாச்சாரம் என்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் காலப்போக்கில் காணாமல் போனால், சினிமாவை தவிர வேறு யார் அதற்கு காரணமாய் இருக்க முடியும். ஒரு மனிதன் தன் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்து கொள்ள வேண்டுமென்றால், அவன் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும். இன்று பெரும்பாலான நேரத்தை இளசுகள் திரைப்படத்தில் தானே செலவழிக்கிறார்கள். அதில் சொல்வது தானே அவர்கள் மனதில் பதியும், அவர்கள் வாழ்க்கை முறையை நிர்ணையிக்கும்.
என்னுடைய 10 முதல் 15 வயதுகளில் நான் குடும்பத்துடன் சென்று நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். உதாரணமாக,
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
பூவே உனக்காக
கோகுலத்தில் சீதை
இந்த படங்களை பார்த்து விட்டு வெளியே வரும் போது, ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இருக்கும் ஒரு தெய்வீகமான அன்பே என் மனதில் பதிந்து இருக்கும். ஆனால், இன்றைய திரைப்படங்களைப் பார்த்து விட்டு, அதே வயது ஆண் அல்லது பெண் திரையரங்கை விட்டு வெளியில் வரும் போது, அவர்கள் மனதில் காமம் மட்டும் தானே பதியும். அப்படி தானே இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றது.
இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டாமா? நம்முடைய வாரிசுகள் நல்ல பண்புகளுடன் வாழ, நாம் வழிவகை செய்ய வேண்டாமா? சிந்தியுங்கள் தமிழர்களே. நல்ல திரைபடங்களை மட்டும் ஆதரிப்போம். கலாசாரத்தை சீர் குலைக்கும் படங்களை விரட்டி அடிப்போம். (இதன் தொடர்ச்சியைப் படிக்க கீழே பார்க்கவும்.)
பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6| பகுதி 7 |
1 கருத்து:
Nice Composition.
கருத்துரையிடுக