எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் தமிழ் நாளிதழைப் படிக்க தவறுவதில்லை. எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே இந்த பழக்கம் இருக்கிறது. எங்களுக்கு தமிழ் மீது பற்றும், மரியாதையும் வரவைத்த எங்கள் முன்னோர்களுக்கு மிக்க நன்றி.
அதே போல், நம் குழந்தைகள் வளரும் போதே தமிழ் பாலை ஊட்டி வளர்க்க வேண்டும். பள்ளியில் ஆங்கிலம் சொல்லி கொடுப்பார்கள். தமிழும் சொல்லி கொடுப்பார்கள். ஆனால் தமிழ் பாடம் சொல்லித் தரும் நேரத்தில் மட்டும் தான் தமிழ் பேசுவார்கள். மீதி நேரங்களில் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். அதனால் அவர்கள் ஆங்கில அறிவைப் பள்ளி வளர்க்கும். நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் அறிவை நாம் தானே வளர்க்க வேண்டும்.
தமிழ் நாளிதழ் வாங்குவதைப் பழக்கமாக வைய்யுங்கள். நாம் செய்வதைத் தான் நம் குழந்தைகள் செய்வார்கள். நீங்கள் தமிழ் நாளிதழைப் படிப்பதைப் பார்க்கும் உங்கள் குழந்தைகள் தாங்களும் அதைப் படிக்க வேண்டும் என்று உணர்வார்கள். அதன் பிறகு அவர்கள் வாழ்வில் அது ஒரு அங்கமாக இருக்கும். தமிழ் தான் நம் மூச்சு. அதன் சிறப்பை நம் அடுத்த தலைமுறைக்கு முழுமையாக எடுத்து சொல்வோம் என்று உறுதிமொழி ஏற்போம்.
கீழே கொடுக்கப்பட்டள்ள வீடியோ காட்சியில் நம் தமிழின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. தவறாமல் பாருங்கள். தமிழன் என்று கர்வத்துடன் சொல்லுங்கள். தலை நிமிர்ந்து நில்லுங்கள். தமிழர்களாய் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றியை சொல்லுங்கள்.
இங்கு வீடியோவை காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக