Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு. விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா?
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். மைதா போதுவாக கோதுமையால் தயாரிக்கப்படும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா தயாரிக்க தொடங்கினார்கள். மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட.

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு(கோதுமை இல்லாத காலத்தில் மரவள்ளிக்கிழங்கு) மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பனசாயல் பெரோக்சைட் (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம். இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவு நோய்க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலக்கபடுகிறது.மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

அலொக்சான் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்து, நீரிழிவு நோய் வரவைப்பதற்கு காரணமாக அமைகிறது(சோதனைக்கூடத்தில்). ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் . இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது. Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கோளாறு ,இருதய கோளறு ,நீரழிவு நோய் போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம். இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .
நன்றி!!(இதை எழுதியவருக்கு என் நன்றி)

7 கருத்துகள்:

Thangavel Manickam சொன்னது…

பரோட்டா விஷ உணவு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

வலிப்போக்கன் சொன்னது…

புரோட்டாவில் இவ்வளவு இருக்கா,யார் கேட்கப்போகிறார்கள். நல்ல விசயங்களுக்கு என்றைக்கு கேட்டார்கள்

rajamelaiyur சொன்னது…

அய்யயோ .. எனக்கு புரோடாதான் பிடிக்கும் ..

rajamelaiyur சொன்னது…

உங்களுக்காக ..

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

Unknown சொன்னது…

புரோட்டா கேன்ஸல்...!

பெயரில்லா சொன்னது…

Good joke

Krishna சொன்னது…

Nice to know.. Unfortunately, the picture you posted makes me to eat பரோட்டா now.

Post Top Ad

Your Ad Spot

Pages