”தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும்”, என்று கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அறிவித்திருந்தார். அதற்கான காரணம். தமிழ் மீது அவர் வைத்திருந்த பாசமும், தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் தான் என்று கூறினார்கள். அம்மா அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகும் இந்த திட்டம் தொடர்கிறது. தமிழை வளர்க்க நினைக்கும் இவர்கள் ஆவலை நான் பாராட்டுகிறேன். ஆனால், தமிழில் படங்களின் பெயரை வைத்தால், தமிழ் வளர்ந்து விடுமா? படத்தின் உள்ளே தமிழ் கலாசாரத்தை சீர் குலைக்கும் காட்சிகள் இருக்கிறதே. கலாசாரம் கெடும் போது, தானாகவே மொழி சிதைந்து விடும் என்று அவர்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா?தமிழில் பெயர் மட்டும் வைத்து விட்டு, படத்தில் பெரும்பாலான வசனங்களில் ஆங்கிலம் தானே கலந்திருக்கிறது. நம் கலாசாரத்தை சீர் குலைக்கும் ஆபாச பாடல்களும், காட்சிகளும் தானே இருக்கிறது. ஆனால் தமிழில் பெயர் வைத்த காரணத்தினால், அந்த படங்களுக்கெல்லாம் வரி விலக்கு அளிக்கப்படுவது நியாயம் தானா?
அதுவும், தலைப்பு முழுமையாக தமிழில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சிவாஜி, The boss
எந்திரன், The Robot
வா, Quarter Cutting
மங்காத்தா, A Venkat Prabhu Game
காவலன், the bodyguard
வித்தகன், with the gun
ஆகிய படங்கள் வரி விலக்கு பெற்ற படங்கள். ”தமிழை வளர்ப்பது மாதிரி தெரிய வேண்டும், ஆனால் தமிழ் வளரக் கூடாது”,என்று அவர்கள் நினைப்பதாய் தானே தெளிவாய்த் தெரிகிறது. தமிழ், தமிழ் என்று கூவி நம்மவர்களை ஏமாற்றும் இந்த அரசியல்வாதிகளிடம் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உண்மையான தமிழ் பற்றுள்ள ஒருவரை கண்டுபிடித்து, ஆட்சியில் அமர வைப்போம். அன்று தான் நம் தாய்மொழி தமிழ் வளரும். அதன் பெருமையை மக்கள் உணர்வார்கள். (இதன் தொடர்ச்சியைப் படிக்க கீழே பார்க்கவும்.)
| பகுதி 1|பகுதி 2|பகுதி 3|பகுதி 4|பகுதி 5|பகுதி 6| பகுதி 7 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக