Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

கண்களுக்கு எல்லை.....

கண்களுக்கு எல்லை உண்டு
கற்பனைக்கு எல்லை இல்லை

வாழ்க்கைக்கு முடிவு உண்டு
நம் காதலுக்கு முடிவு இல்லை

நாளிற்கு முடிவு உண்டு
நல் எண்ணத்திற்கு முடிவு இல்லை

ஆண்டிற்கு முடிவு உண்டு
காதலின் இனிமைக்கு முடிவு இல்லை

நேரம் காலம் முடியும்
நம் உயிரும் கூட முடியும்
நம் பாசம் முடிவது இல்லை

உலகம் கூட அழியும்
நம் உடலும் கூட அழியும்
நம் காதல் அழிவது இல்லை

கண்களுக்கு எல்லை உண்டு
கற்பனைக்கு எல்லை இல்லை

வாலிபம் விட்டு போகும்
சொந்த பந்தம் விட்டு போகும்
நம் காதல் விட்டு போவதில்லை

பணம் விட்டு போகும்
பதவி விட்டு போகும்
நம் நேசம் விட்டு போவதில்லை

பாதை முடிந்து போகும்
காதல் பயணம் முடிவது இல்லை

கண்களுக்கு எல்லை உண்டு
கற்பனைக்கு எல்லை இல்லை

வாழ்க்கைக்கு முடிவு உண்டு
நம் காதலுக்கு முடிவு இல்லை

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages