ஏப்ரல் மாதம் 2006 ஆம் ஆண்டு என்னுடைய படிப்பு முடிந்து பட்டதாரியாக ஆனேன். அதன் பிறகு தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தேன். என்னுடன் வேலை தேடிய நண்பர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றன் ஒன்றாக வேலை கிடைக்கத் தொடங்கியது. நண்பர்கள் என்றாலும், அவர்களுக்கு வேலை கிடைக்கும் போது, எனக்குள் ஒரு புது விதமான வலி தோன்றும். அதற்கு பல காரணங்கள் இருந்தது. ஒரு காரணம், எல்லாருக்கும் வேலை கிடைத்து போய்விட்டால் நான் மட்டும் தனியாக வேலை தேடி அலைய வேண்டும். மற்றொன்று, ”எனக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லையே. நமக்கு திறமை இல்லையோ, அதனால் தான் வேலை கிடைக்கவில்லையோ. நமக்கு வேலையே கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பல கேள்விகள் என்னுடைய மனதைக் கீறும்.”
"இவ்வளவு நாளாக உனக்கு வேலை கிடைக்கவில்லையே. நீ நிஜமாக டிகிரி முடித்துவிட்டாயா அல்லது ஆரியர் வைத்திருக்காயா.”
“என் பக்கத்து வீட்டு பையனுக்கு இன்போசீஸ் கம்பெனியில் வேலை கிடைத்து இருக்கிறது. சம்பளம் இருபைத்தந்து ஆயிரம் ரூபாய். உனக்கு இன்னும் வேலை
கிடைக்கவில்லையா?”
இது மாதிரி உறவினர்கள் கேள்வி கேட்கும் போது என்னை விட மேலாக என்னுடைய அம்மா கவலைபடுவது அவர்களின் கண்கள் வழியாக எனக்கு தெரியும். என்னால் தானே என் அன்னைக்கு இந்த துன்பம். ஒரு அன்னைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாத ஒரு மகன் அவர்களுக்கு இருந்தேன்ன லாபம் என்று போன்ற ஆபத்தான சிந்தனைகள் கூட அவ்வப்போது தலை தூக்கும். என்ன செய்வது என்றே புரியவில்லை. தொட்ட காரியம் எல்லாம் தோல்வி. மனவலி அதிகரித்து கொண்டே போனது. வாழ்க்கையே இருண்ட சிறை போல் ஆனது. நம்பிக்கையை இழந்தேன். பைத்தியம் பிடித்தவன் போல் ஆனேன். குடும்பத்தாரிடம் பேசுவதை குறைத்து என்னை நான் தனிமை படுத்திக் கொண்டேன். ஒவ்வோரு இண்டர்வீயுக்கும் செல்லும் போதும் இந்த தடவை வேலை கிடைத்தே ஆக வேண்டும் என்ற மன நிலையோடு சென்றேன். அதனால் மன உளைச்சல் அதிகமானது. இப்படி மன உளைச்சலுடன் இண்டர்வீயுக்கு போனால் எப்படி வேலை கிடைக்கும்.
இதையும் மீறி, வேலை தேட வேண்டும். இண்டர்வீயுக்கு போக வேண்டும். aptitude பரீட்சைக்கு என்னை தயார் செய்ய வேண்டும். சில மாதங்களுக்கு பிறகு ஒரு கம்பெனியில் இருந்து பரீட்சைக்கு அழைத்தார்கள். நம்பி, நம்பி போய் ஏமாந்து விட்டதால், இம்முறை எதிர்ப்பார்ப்பு இல்லாமல் சாதாரணமாக சென்றேன். அதனால் தான் என்னமோ நான் மிகுந்த மன அமைதியுடன் இருந்தேன். வேலையும் கிடைத்தது.பதினொரு மாத போராட்டத்திற்கு பலனும் கிடைத்தது.
வலியை மறந்து உழைத்தேன். வலியிலும் உழைத்தேன். கடைசியில் பலன் கிடைத்தது.
”ஆண்டவா, என்னை ஞானி ஆக்கு. இன்ப, துன்பங்களை ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளும் மனதினை கொடு!!!!”
”தாயின் கருவறையில் இருந்து வெளி வரும் போது, எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நமக்கிருந்த ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி வளர்ந்த பின்னும் நமக்கு இருக்குமாயின் எப்போதும் வெற்றி நம் கையில் தான்.”
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக