கடவுள் : ஏன் நீ எப்பொழுதும் சோகத்திலேயே முழுகி இருக்கிறாய்? சந்தோஷமாய் இருக்க இவ்வுலகில் எவ்வளவோ இருக்கிறது. அதெல்லாம் உன் கண்களுக்கு தெரியவில்லையா?
மனிதன் : அட போங்க சாமி! தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து விடுகிறது. அதுவே என் மனதை நாள் முழுவதும் அரித்து கொண்டிருக்கிறது. வேறு எந்த விஷயத்திலும் என் மனம் செல்ல மறுக்கிறது.
கடவுள் : ஓ! அப்படியா! இன்றைக்கு என்ன உன் பிரச்சனை?
மனிதன் :ஆபிஸில் மானேஜர் திட்டிவிட்டார்
கடவுள் : ஏன் திட்டினார்?
மனிதன் : என்னுடைய வேலையில் ஒரு சிரிய தவறு செய்து விட்டேன். அதனால் தான் திட்டினார்.
கடவுள் : தவறு செய்தால் திட்டத்தான் செய்வார்கள். அப்போது தான் அது நம் மனதில் ஆழமாய் பதியும். மறுபடியும் அந்த தவறை இழைக்க மாட்டோம்.
மனிதன் : அது சரி சாமி! இருந்தாலும் அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாள் முழுவதும் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது
கடவுள் : அதில் இருந்து வெளியில் வருவதற்கு நமக்கு பிடித்த, சந்தோஷம் தரும் செயல்களை செய்ய வேண்டும். கஷ்டம், துன்பம் எல்லா நாளும் வர தான் செய்யும். அதனால் நான் சந்தோஷமாக இருக்க மாட்டேன் என்று சொன்னால் உன் வாழ்நாள் முழுவதும் நீ சந்தோஷத்தையே பார்க்க முடியாது.வேரில்லாமல் மரம் இல்லை. அது போல் துன்பம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதையே எண்ணிக் கொண்டு நேரத்தை வீணடிப்பதும், மனதை காயபடுத்துவதும் மூட்டாள் தனம். பூப்போல் இருக்க வேண்டிய மனதை, நீ பிச்சி எறிந்து காயபடுத்தலாமா??
மனிதன் : எனக்கு இப்ப எல்லாம் புரியுது சாமி. இனிமேல் நான் சந்தோஷமாக இருப்பேன் சாமி!!
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக