நான் கடந்த சில மாதங்களாக கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதற்கு இசை அமைத்து யாராவது பாட மாட்டார்களா என்று மிகவும் முயன்று கொண்டிருந்தேன். ஒரு சில இசை விருப்பம் உள்ளவர்கள் தமிழ் வரிகளுக்கு இசை அமைக்க தெரியாது என்று கூறி விட்டார்கள்[தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்] ஒரு சில பேர் தமிழே படிக்க தெரியாது என்றும் கூறி விட்டார்கள்[இவர்களும் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான்]
அதன் பிறகு என் நண்பர் மூலம் வாணி என்பவர் இசை ஞானம் உள்ளவர் என்று தெரிந்துக் கொண்டேன். அவர் ஆந்திராவில் பிறந்தவர். என்றாலும் தமிழ் நன்றாக பேசுவார்கள். தமிழ் படிப்பார்கள். தமிழில் பாடவும் செய்வார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் பல பேர் தமிழில் எழுத படிக்க தெரியாத போது, பிற மாநிலத்தில் இருந்து கொண்டு தமிழ் மொழி மீது ஈடுபாடு கொண்டிருப்பது போற்றப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.
நான் என்னுடைய வரிகளை அனுப்பி பாடி தர முடியுமா என்று கேட்டேன். அவரின் busy ஆன வேலையிலும், சரி என்றார்கள். அவர் தற்செயலாக மெட்டு போட்டு பாடிய பாடலை தான் நான் இங்கு இணைத்து உள்ளேன். அதுவே எனக்கும், மற்றவர்களுக்கும் பிடித்து போய் விட்டது. இப்பாடலை மேலும் சிறப்பாக பாடித் தருவதாக கூறியிறிக்கிறார். அது தயார் ஆனதும் அதை விரைவில் வெளியிடுவோம். வாணி அவர்களுக்கு மிக்க நன்றி. வருங்காலத்தில் என்னுடைய பல கவிதைகள் அவர்கள் குரலில் ஒலிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பாடலை நான் வெளியிடுகிறேன்.
நம்பிக்கை இருக்கும் போது....
புதன், 8 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
1 கருத்து:
This is a superb debut attempt! Wonderful lyrics and beautiful singing. Way to go!
கருத்துரையிடுக