தொடர் வெற்றியால் மனிதன்
பெறுகிறான் திடமான திமிறை
தொடர் தோல்வியால் மனிதன்
பெறுகிறான் பலமான இதயத்தை
பாராட்டு, புகழ் மனிதனிடம்
தன் தாகத்தை தீர்க்குது
அவமானம், படுதோல்வி மனிதனிடம்
ஒரு தாகத்தை சேர்க்குது
தாகம் இருந்தால் தண்ணீர் தேடி போவாய்
இல்லாவிட்டால் சுகமாய் உட்கார்ந்து இருப்பாய்
தாகம் வேண்டுமா
சுகம் வேண்டுமா
எப்போதும் வேண்டும் ஒரு தாகம்
அப்போது தான் கிடைக்கும் ஒரு வேகம்
எப்போதும் வேண்டும் ஒரு வேகம்
அப்போது தான் கிடைக்கும் ஒரு சிந்தனை
எப்போதும் வேண்டும் ஒரு சிந்தனை
அப்போது தான் கிடைக்கும் ஒரு செயல்
எப்போதும் வேண்டும் ஒரு செயல்
அப்போது தான் கிடைக்கும் ஒரு வெற்றி
எப்போதும் வேண்டும் ஒரு வெற்றி
அப்போது தான் கிடைக்கும் ஒரு திருப்தி
எப்போதும் வேண்டும் ஒரு திருப்தி
அப்போது தான் கிடைக்கும் அடுத்த தாகம்
எப்போதும் வேண்டும் சுகம்
என்று நீ நினைத்தால்
அது உன் சுகத்தை கெடுக்கும்
எழுந்திடு தாகத்துடன் எழுந்திடு
தண்ணீர் தேடி அலைந்திடு
தேடி கிடைக்கும் தண்ணீரே
கொடுக்கும் பெரும் ருசியை
எப்போதும் வேண்டும் ஒரு தாகம்
அப்போது தான் கிடைக்கும் ஒரு வேகம்
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக