பொறுமையாய் இருப்பது
மிகவும் கடினம்
பொறுமையாய் இருந்தால்
என்றும் இன்பம்
கோபம் வருவது
மனித இயல்பு
கோபம் வந்தால்
போகும் நிம்மதி
தோல்வி வருவது
இயற்கையின் நியதி
தோல்வி வந்தால்
வேண்டும் அமைதி
பொறுமையாய் இருப்பது
மிகவும் கடினம்
பொறுமையாய் இருந்தால்
என்றும் இன்பம்
உழைப்பு தருவது
தேவையான உணவை
உழைப்பு தந்தால்
உண்டு வெற்றி
ஆசை வருவது
அதிசியம் இல்லை
ஆசை வந்தால்
விபரீத சிந்தனை
பொறுமையாய் இருப்பது
மிகவும் கடினம்
பொறுமையாய் இருந்தால்
என்றும் இன்பம்
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக