சமீபத்தில் என் நண்பரிடம் இருந்து ஒரு இமெயில் வந்தது. அவர் என்னிடம் ஒரு situation சொல்லி விட்டு, அதற்கு பாட்டு எழுதி தர முடியுமா என்றார். நான் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறினேன்.
முயன்றேன். எழுதி இருக்கிறேன்.
”நம்முடைய ஷீரோ தீடிரென்று வேலை காரணமாக ஒரு வருடம் அமெரிக்கா சென்று விட்டார். அப்போது பிரிவினை தாங்காமல் ஷீரோயின் பாடுகிறாள்..”
தினம் தினம் நான் வாடினேன்
உன்னை எண்ணி எண்ணி
உருகினேன் வருந்தினேன்
நான் உன்னை எண்ணி
ஒரு வருடம் என்பது
ஒரு யுகமாய் தெரியுது
ஒரு நாளில் பல தடவை
நாளை எண்ணி எண்ணி தவித்தேன்
ஆனால் ஒரு முறை தானே நாள் குறையுது
உன் பிரிவு என்னை
உயிரில்லாத பொருளாய் ஆக்குது
நம்முடைய பிரிவு
அது விதி செய்த கோலம்
விதியினை வெல்ல
காத்திருக்க வேணும்
தூங்கி எழும் நேரத்திற்குள்
ஒரு வருடம் ஓடிதாதோ?
என் துயரை போக்கிடாதோ?
தினம் தினம் நான் வாடினேன்
உன்னை எண்ணி எண்ணி
விஞ்ஞானம் பல சாதனைகளை செய்யுது
நாளை ஓட்டும் எந்திரம் எப்போ வர போகுது?
நாட்டில் எத்தனையோ கட்சி ஆட்சிக்கு வருது
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தடை எப்போ வர போகுது?
தினம் தினம் எத்தனையோ அதிசியம் நிகழுது
ஒரு வருட வேலை, ஒரு நாளில் முடியும் அதிசயம் எப்போ நிகழ போகுது?
வந்து விடு விரைவில் வந்து விடு
என் உயிரை என்னிடம் தந்து விடு
வந்து விடு விரைவில் வந்து விடு
உன் உயிரை காக்க வந்து விடு
தினம் தினம் நான் வாடினேன்
உன்னை எண்ணி எண்ணி
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
2 கருத்துகள்:
Prabhu,
I am really proud to have you as a friend. You are indeed a big writer in the making. Keep up this good work da.
Thank you very much Vani. All my lyrics are waiting to become a song with your voice.
கருத்துரையிடுக