Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

வேகமாய் நடந்து விடு!

வேகமாய் நடந்து விடு
வெற்றியை நோக்கி நடந்து விடு

சரியான நேரத்தில்
வெற்றி வரும் உன்னை தேடி

வருமா வருமா வெற்றி வருமா
நீ உழைக்காமல் இருந்தால்

வருமா வருமா உணவு தான் வருமா
நீ உழைக்காமல் இருந்தால்

பகலில் தூங்கி சோம்பேறியாகாதே
செய்ய வேண்டியவை ஏராளம்
நீ முடி ஒவ்வொன்றாய்

நீ உதவிடு மற்றவர்களுக்கு
அது காக்கும் உன் சோதனை காலத்தில்
உன்னை சேர்க்கும் உன் சாதனையை நோக்கி

வேகமாய் நடந்து விடு
வெற்றியை நோக்கி நடந்து விடு

ஆகுமா ஆகுமா வேலை ஆகுமா
நீ உட்கார்ந்து இருந்தால்

போதுமா போதுமா நேரம் தான் போதுமா
நீ உட்கார்ந்து இருந்தால்

நேர்மையாய் இருந்திடு
விண்ணைத்தொடும் நேரம் விரைவில்

அநியாயம் செய்தால்
அழிவு வரும் விரைவில்

நம்பினால் தான் வாழ்க்கை
உன்னை நீ நம்பினால் தான் வாழ்க்கை

நீ வை நம்பிக்கையை உன் மேல்
உன் வெற்றி வரும் உன் கை மேல்

வேகமாய் நடந்து விடு
வெற்றியை நோக்கி நடந்து விடு

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages