அதன் பிறகு அப்பா, சின்ன அண்ணன், தாத்தா, பாட்டி ஆகியோருக்கும் அந்த நோய் பரவியது. அம்மா மட்டும் தான் எங்கள் வீட்டில் தப்பித்தார்கள். அனைவரும் குணம் ஆகி, சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆனது. இந்த ஒரு வார பிரளயம் யாரால் நிகழ்ந்தது. என்னுடைய நண்பன் கண்ணனால் நிகழ்ந்தது.
சும்மா இருந்த என்னை, கண்ணை ஊதி விடு என்று சொன்னதால் வந்த வினை இது. கண் சரியான பின் பள்ளிக்குச் சென்றேன். கண்ணன், “டேய் சாரி டா. எனக்கு மெட்ராஸ் ஐ இருக்குன்னு அப்ப எனக்கு தெரியாது டா. என்னால தான் உங்க வீட்ல எல்லாருக்கும் அது பரவிடுச்சு. சாரி டா” என்று பரிதாமாக, சோகமாக கூறினான்.
கவலையே உருவாக இருந்த அவன் முகத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. நான் நன்றாக சிரித்து விட்டேன். சிரித்துக் கொண்டே, “வீட்ல எல்லோருக்கும் சரி ஆயிடுச்சு. நீ என்னடா இப்படி வருத்தபடர?” என்று கூறி சிரித்துக் கொண்டே இருந்தேன். அதைப் பார்த்ததும் அவன் மனதில் இருந்த குற்ற உணர்வு நீங்கி அவனும் வாய் விட்டு சிரித்தான்.
2 கருத்துகள்:
super story. epo pei eruku nu solla varengala ellanu sola varengala sir.
கடவுள் இருக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அதே வகையில் பேய் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நீங்கள் படித்த இந்த உண்மைச் சம்பவத்தில் பேய் இல்லை என்பதை நான் கூறியிருக்கிறேன்.
கருத்துரையிடுக