மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டேன். பள்ளியில் மதியம் சாப்பிட்ட பிறகு நன்றாக தூக்கம் வரும். ஆனால் தூங்க முடியாத தர்ம சங்கடமான நிலைமையாக இருக்கும். அந்த கவலையின்றி சாப்பிட்டவுடன் நிம்மதியாக, ஜாலியாக தூங்கி விட்டேன். மாலை தான் எழுந்தேன். அண்ணன்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
தூரமாக இருந்து அவர்கள் கண்களைப் பார்த்தேன். அவர்கள் கண்களில் பிரச்சனை இல்லை என்று தெரிந்தது. அம்மாவின் ஆணைபடி அன்று நான் விளையாட செல்லவில்லை. நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு பெரிய அண்ணன் கண்களைத் தொடர்ச்சியாக சொறிந்து கொண்டிருந்தான். அவன் கண்ணாடியில் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். “அவனுக்கு ராகு காலம் தொடங்கி விட்டது” என்று என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன்.
அன்று இரவு சாப்பிட்டு தூங்கி விட்டேன். காலையில் தான் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நிக்ழ்ந்தது. பெரிய அண்ணன் பெரும் கவலையோடு அம்மாவிடம் ஓடி வந்து, “என் கண்களை திறக்க முடியவில்லை” என்று கூறினான். நாங்கள் அவன் கண்களைப் பார்த்து அதிர்ந்து விட்டோம். இரண்டு கண்களும் பெரிதாக வீங்கி இருந்தது.ஒரு எலுமிச்சை பழத்தை அவன் கண்களில் வைத்தது போல இருந்தது. அவன் எவவளவு முயற்சி செய்தும் கண்களைத் திறக்க முடியவில்லை.
பிறகு அம்மா அவன் கண்களில் தண்ணிரைக் கொஞ்சம் ஊற்றி அவனைத் திறக்க முயற்சி செய்ய சொன்னார்கள். தீவிர முயற்சிக்குப் பின் அவன் லேசாக கண்களைத் திறந்தான். “வா வா. உனக்கும் மெட்ராஸ் ஐ தான்” என்று என்னுடைய மனது கூறியது. அவனும் டாக்டரிடம் சென்று மருந்துகளை வாங்கி கொண்டு வந்தான். அவனுக்கும் மெட்ராஸ் ஐ என்று உறுதி ஆனது.
இறுதி பகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக