Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நண்பனுக்கு உதவியதால்.. -> பகுதி->2


அன்று மாலை வழக்கம் போல் வீட்டுக்கு சென்று, அண்ணன் களுடன் விளையாடி விட்டு, பிறகு படித்து விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்தபோது, என் கண்களில் ஒரு புது வித உணர்வு தோன்றியது. கண்கள் வலித்தது. கண்ணாடியில் பார்த்தபோது கண்கள் சிவந்து இருந்தது தெரிந்தது. என் அம்மாவிடம், கண்களில் வலிப்பதையும், சிவந்திருப்பதையும் கூறினேன்.

“மெட்ராஸ் ஐ (கண் நோய்) நோய் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அதுவாக இருக்கலாம் டா. பள்ளிக்குப் போகாதே. நாம் கண் டாக்டரிடம் சென்று பார்ப்போம்.” என்று என் அம்மா கூறினார். நானும் ஒரு நாள் லீவு கிடைத்தது என்று ஜாலியாக இருந்தேன். அப்போது கண்ணனிடம் இருந்து போன் வந்தது.

“டேய், நேற்று இரவு டாக்டர் பரிசோதித்து விட்டு எனக்கு மெட்ராஸ் ஐ இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனவே நான் இன்று பள்ளிக்கு வரமாட்டேன் டா. மிஸ் கிட்ட சொல்லிடு.” என்று கண்ணன் கூறினான்.

“உனக்கு மெட்ராஸ் ஐ இருக்கா. போச்சு போ. இன்று காலையில் இருந்து எனக்கும் கண்களில் பிரச்சனை இருக்கிறது. நானும் இன்றைக்கு பள்ளிக்கு போகலடா. எனக்கும் மெட்ராஸ் ஐ தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நேற்று உன் கண்களை ஊதியதால் தான் அது எனக்கும் பரவி இருக்கிறது. நான் டாக்டர் கிட்ட பரிசோதனை செய்த பின் உனக்கு போன் செய்கிறேன்” என்று கூறி போனை வைத்துவிட்டேன்.

நானும், அம்மாவும் டாக்டரிடம் சென்றோம். அவர் இது மெட்ராஸ் ஐ தான் என்று உறுதி செய்தார். சில மருந்துகளைக் கூடுத்தார். பின் வீடு திரும்பினோம். “கண் சரி ஆகும் வரை அண்ணன் களுடன் விளையாடாதே, குறிப்பாக அண்ணன்கள் அருகிலேயே செல்லாதே. இல்லையென்றால் அவர்களுக்கும் பரவி விடும்.” என்று அம்மா கூறினார்.

என் மனதிற்குள் நான் கூறியது, “அடடடா. அவங்க கூட தான் நேற்று ரிக்‌ஷாவில் வந்தேன். ஒரு வேளை அவர்களுக்கும் பரவி இருக்குமோ. அவர்கள் இன்று மாலை வீடு வரும் போது பதில் தெரிந்து விடும்”

அடுத்த பகுதி

2 கருத்துகள்:

Sunny சொன்னது…

Nice narration of events. could see a lot of improvement in your narration style..keep it up. After reading the first part..i surmised a lot of events..but the madras eye part totally was not in my thoughts..good style to hold the reader's attention...keep improving.. - Sunil

Thangabalu சொன்னது…

Thanks Sunil for your appreciation. Thanks for spending time to read my stories.

Post Top Ad

Your Ad Spot

Pages