Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நான் பார்த்தது என்ன? -> இறுதி பகுதி


கேட்டை நோக்கி பயத்துடனும், நடுக்கத்துடனும் நடந்தேன். கேட்டை அருகில் சென்று பார்த்தேன். பூட்டு ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் கேட்டின் பின்னால் எவரும் இல்லை. அருகில் சென்று பார்த்தேன். என்னுடைய தேடலுக்கான விடையும் அப்போழுது கிடைத்தது. திகிலுடனும் பயத்துடனும் ஆரம்பித்த அந்த சம்பவம் இறுதியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தமாசாக போனது. நான் என்ன பார்த்தேன். இனிமேலும் உங்களைப் பொறுக்க வைக்க விரும்பவில்லை. சொல்லுகிறேன். கேளுங்கள்.

கேட்டின் பின்னால் பார்த்தேன். அங்கே ஒரு நாய் உட்கார்ந்திருந்தது. அதனுடைய முதுகு கேட்டின் மீது சாய்ந்திருந்தது. அது தன்னுடைய காலினால் தன்னுடைய உடம்பை சொறிந்துக் கொண்டிருந்தது. அது அவ்வாறு செய்யும் போது அந்த அதிர்வினால், எடை குறைவாக உள்ள பூட்டு ஆடிக் கொண்டிருந்தது. பேயை பார்க்க போய், கடைசியில் நாயை தான் பார்த்தேன். என்னுடைய பயம் எல்லாம் நீங்கி, முகம் நிறைய புன்னகையோடு என்னுடைய அறைக்கு வந்து நிம்மதியோடு தூங்கினேன். மறுநாள், நடந்தவற்றை அம்மாவிடம் கூறினேன். அவர்களும் நிம்மதி அடைந்தார்கள்.

நீங்கள் கேட்கும் கேள்வி இது தானே:
“ஜன்னல் வழியாக நீ பார்த்தாய், கேட்டின் வெளியே இருக்கும் நாய் உன் கண்ணில் படவில்லையா?”

சரியான கேள்வி தான். கேட்டின் கீழ் பகுதியின் உள்ள துளையின் வழியாக பெருச்சாளிகள் உள்ளே வந்து தொல்லை கொடுத்தால், கீழ்பகுதியை மட்டும் ஒரு அலுமினயம் sheet ஆல் மூடி வைத்திருந்தோம். ஆகவே ஜன்னல் வழியாக பார்க்கும் போது, கேட்டின் பின்னால் அமர்ந்திருந்த நாய் என் கண்ணில் படவில்லை. இனிதாக முடிந்த இந்த சம்பவத்திலுருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் ஒன்று இருக்கிறது.

“கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பொன் மொழி எவ்வள்வு அர்த்தமுள்ளது என்பது இப்பொழுது நன்றாக புரிந்து இருக்கும். நடந்த சம்பவத்திற்கு பேய் தான் காரணம் என்று அறை உள்ளேயே நான் இருந்திருந்தால், ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் பயத்திலயே என் இரவு ஓடிக் கொண்டிருந்திருக்கும். துணிச்சலுடன் வெளியே வந்தததால் தான் விடையும் கிடைத்தது, தூக்கமும் மறுபடியும் கிடைத்தது. மனத்தை உலுக்கிக் கொண்டிருந்த பயமும் நீங்கியது. துணிவுடன் நமது காலை எடுத்து வைப்போம், வெற்றி நமக்கே.

4 கருத்துகள்:

Vjr சொன்னது…

funny and interesting...

Bharath சொன்னது…

itha thanda krishna first part la ye solliten... oru nay oda charecter avanukku theriyatha :).. anyway good try.

Unknown சொன்னது…

sammma mokaaaaaaaaaaa

Unknown சொன்னது…

Super thala

Post Top Ad

Your Ad Spot

Pages