அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த கட்டத்தில், கண்ணன் என்பவன் தான் என்னுடைய நெருங்கிய நண்பன். நாங்கள் வகுப்பறையில் ஒன்றாக தான் இருப்போம். ஒன்றாக தான் படிப்போம்.
ஒரு நாள் உணவு இடைவேளையின் போது, கண்ணன் அவனுடைய கண்னை விரலால் தேய்த்துக் கொண்டு என் அருகில் வந்தான். அவன் கூறியது, “டேய் காலையில் இருந்தே என்னுடைய கண்கள் எறிகிறது. தூசி விழுந்துவிட்டது என்று நினைக்கிறேன். நீ கொஞ்சம் ஊதி விடுடா. தூசி வெளியே வந்துவிட்டால் சரி ஆகிவிடும்.”
நான் அவன் கண் அருகில் சென்று ஊதினேன். நான் அவனிடம் கூறியது, “இப்ப சரி ஆச்சா டா? நான் ஊதி விட்டேன். தூசி வெளியே வந்திருக்கும்.”
அவன் கூறியது, “இன்னும் சரி ஆகல டா. தூசி இன்னும் வெளியே வரலன்னு நினனக்கிறேன். மறுபடியும் ஊது டா”
நான் மறுபடியும் ஊதினேன். நன்றாக ஊதினேன். ஊதி ஊதி வாய் வலித்தது தான் மிச்சம். நான் அவனிடம், “நன்றாக ஊதிவிட்டேன். தூசி வெளியேறி இருக்கும். கண்களில் இருந்து உன் கைகளை எடுத்து விட்டு, உன்னுடைய notebook ஐ எடுத்து கூடுடா. மிஸ் வருவதுற்கு முன்னால் காப்பி அடித்து விடுகிறேன்.”
“இந்தா டா notebook. சீக்கிரம் எழுத்தி விட்டு கூடு. மிஸ் பார்த்தா, இரண்டு பேருக்கும் திட்டு விழும் டா”
அடுத்த பகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக