காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு, டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். நடந்த வினோதத்தை யாரிடம் கூறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் அம்மாவும், பாட்டியும் தான் இருந்தார்கள். அம்மாவிடம் கூறலாம் என்று முடிவு செய்து விட்டு நடந்தவற்றை அவர்களிடம் கூறினேன். நான் கூறியதைக் கேட்டு விட்டு, என் அம்மா கூறியது:
“இது கண்டிப்பாக பேயின் வேலையாக தான் இருக்கும். என்னுடைய சிறு வயதில் எங்கள் வீட்டில், தினமும் இரவு இதே போல் கதவை தட்டும் சத்தம் வந்து கொண்டிருந்தது. அப்போது நாங்கள் பண்டிதர்களை வர வைத்து பூஜை செய்தோம்.அதன் பிறகு அந்த சத்தம் வரவே இல்லை. நாம் யாருக்கும் எந்த கெடுதல்களையும் செய்யவில்லை. எனவே அந்த பேய்க்கும் கூட நம் மேல் பகை இருக்க வாய்ப்பே இல்லை. நடந்தவற்றை மறந்து விடு. எதற்கும் பயப்படாமல், உன்னுடைய அறையிலேயே நீ உறங்கு. அந்த சத்தம் மறுபடியும் வந்தால், நாம் பூஜை செய்யலாம்.”
"அன்று முழுவதும் இதே சிந்தனையில் எனது மனம் முழுகி இருந்தது. மறுபடியும் இரவே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியமே இல்லை. எனது அறையில் படுக்காமல் வேறு இடத்தில் படுக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் கனினி மயமான இந்த காலத்தில் பேய்க்கு பயந்து, என் உறங்கும் இடத்தை மாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.
இரவு வழக்கம் போல் சாப்பிட்டேன். எனது பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இமெயில் பார்த்து விட்டு, எனது அறைக்கு சென்றேன். அது இன்னொரு சிவராத்திரி என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. பயத்தில் நடுங்கிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தேன். சரியாக் மணி ஒன்று இருக்கும். அப்போது அந்த சத்தம் வர தொடங்கியது. சத்தம் வந்த உடனே நான் எழுந்து ஜன்னல் வழியாக பார்த்தேன். மீண்டும் அதே காட்சி அரங்கேறியது. பூட்டு ஆடிக் கொண்டிருக்கிறது, ஆனால் கேட்டின் வெளியே எவரும் நிற்கவில்லை. இம்முறை அருகில் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க முடிவெடுத்தேன். பயத்தை அழுத்தி விட்டு தைரியத்தை வர வைத்துக் கொண்டேன்.
எனது அறையில் இருந்து வெளியே வந்து கேட்டை நோக்கி நடந்தேன்...
அருகில் சென்று நான் எதைப் பார்த்தேன்?
இறுதி பகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக