நாம் புதிதாக ஒரு வேலையை செய்ய வேண்டும். அந்த வேலையை தொடங்குவதற்கு முன்னே நமக்குள் ஏகப்பட்ட கேள்விகள் முளைக்கும்.
”இந்த வேலை புதிதாக இருக்கிறதே. நம்மால் செய்ய முடியுமா?”
“நம்மால் செய்ய இயலாது என்று நம் உயர் அதிகாரியிடம் சொல்லிவிடலாமா? அப்படி நாம் சொல்லிவிட்டால், அவர் நம் மீது வைத்திருக்கும் நல்மரியாதையை நாம் இழக்க வேண்டி இருக்குமே?”
”எப்படியாவது சிரமப்பட்டு இந்த வேலையை முடித்து விடலாம். முடித்து விட்டால், நமக்கு நிச்சயம் பதிவி உயர்வு கிடைக்கும். இருந்தாலும் பதவி உயர்வுக்காக, நாம் தேவையில்லாமல் தெரியாத வேலையை புதிதாக கற்றுக் கொண்டு செய்ய வேண்டுமா?”
“ஒரு மாதம் மெடிக்கல் லீவு எடுத்துவிடலாமா? அதற்குள் அந்த வேலையை நிச்சயம் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுவார்கள். நாம் தப்பித்து விடலாம். நம் உயர் அதிகாரியிடம் இருக்கும் நற்பெயரையும் நாம் காப்பாத்திக் கொள்ளலாம்”
என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதினுள் தோன்றும். ஆனால் எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஒரு வேலையை புதிதாக பார்க்கும் போது கஷ்டமாய் இருப்பதும், அதை செய்ய தொடங்கும் போது சிறிது சிறிதாய் நம்முடைய தைரியம் அதிகமாவதும் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நிகழும் என்பது தான் அது.
முதல் தடவை ஒரு சவாலான வேலையை செய்ய தொடங்கும் போது, “கஷ்டம், இதை நம்மால் செய்ய முடியாது” என்று மனம் சொல்லுகிறது.
பத்து சதவீத வேலை முடியும் போது, “இதை நம்மால் செய்ய முடியும் போல் தெரிகிறது. ஆனால் கஷ்டம் ஆக இருக்கும்” என்று மனம் சொல்லுகிறது.
இருபத்தி ஐந்து சதவீத வேலை முடியும் போது, “இதை நம்மால் செய்ய முடியும் போல் தெரிகிறது” என்று மனம் சொல்லுகிறது.
ஐம்பது சதவீத வேலை முடியும் போது, “இதை நம்மால் சுலபமாகவே செய்ய முடியும்” என்று மனம் சொல்லுகிறது.
எனவே கஷ்டம் என்று உட்கார்ந்து விடாமல், அந்த வேலையை செய்ய தொடங்கினால், நிச்சயமாக அந்த வேலையை எளிதாக செய்து முடிக்கலாம்.
செவ்வாய், 19 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
1 கருத்து:
மிகவும் சரியாக உறைதுளிர்கள் ... இந்த கருத்து நம் கணணி துறைக்கு மிகவும் பொருந்தும் ... தொடர்ந்து எழுத வாழ்த்துகள்
கருத்துரையிடுக