Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

ரத்த சரித்திரம்

நான் தான் ராகுல். என்னுடைய கதையை நான் சொல்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு...

நான் மும்மைக்கு சென்றேன். அங்கு என் நண்பன் ராஜேஷைப் பார்த்தேன்.

“என்ன டா. எப்பொழுது வந்தாய்? வேலை நல்லபடியாக முடிந்து விட்டதா? வீட்டிற்கு போனியா? பெற்றோர்களுக்கு போன் பண்ணியா?” என்று ராஜேஷ் என்னிடம் கேட்டான்.

“இன்று வேலை விஷயமாக மும்பை வந்தேன். இங்கு தற்செயலாக உன்னை ஓட்டலில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. நாம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இந்த உலகத்தில் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன ராஜேஷ், நான் சொல்றது சரி தானே?” என்று நான் கேட்டேன்.

சில நொடிகள் அமைதியாகி விட்டு, “ஆமாம்” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான் ராஜேஷ்.

”நான் இன்னும் என் வீட்டிற்கு செல்லவில்லை. என் பெற்றோர், என் காதலி அனைவரும் நலமாக இருக்கிறார்களா?” என்று நான் கேட்டேன்.

“அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான்.

“சரி டா. நான் இரவு வருகிறேன். நாம் ஒன்றாக மது அருந்தி எவ்வளவு நாட்கள் ஆகிறது. இன்று இரவு நாம் பாருக்கு செல்வோம். நான் பத்து மணிக்கு வருகிறேன்” என்றேன் நான்.

“சரி டா. இரவு சந்திப்போம்.” என்றான் அவன்.

நான் வாடகைக்கு கார் எடுத்து கொண்டு சரியாக பத்து மணிக்கு ஹோட்டலுக்கு சென்றேன்.
“வாடா என்னுடைய காரிலே சென்று விடலாம்” என்று நான் சொன்னேன்.

“இல்லடா. நான் எப்பவும் என்னுடைய காரில் தான் வருவேன். நான் என்னுடைய காரிலேயே வருகிறேன். நீ உன்னுடைய காரில் வா” என்றான் ராஜேஷ்.

அருமையான Hyundai santro காரில் அவன் வந்தான். பாருக்கு சென்றோம். மது அருந்த ஆரம்பித்தோம். எனக்கு ஒரு போன் கால் வந்ததால் வெளியில் சென்று பேசி விட்டு நான் உள்ளே வந்தேன். சிறிது நேரம் கழித்து அவனுக்கும் போன் ஒரு போன் கால் வந்தது. அவனும் வெளியில் பேசிவிட்டு வந்தான்.

“சரி டா. நான் கிளம்புகிறேன். எனக்கு தூக்கம் வருது டா” என்றான் ராஜேஷ்.

“உன்னால் கார் ஓட்ட முடியுமா, இல்லையென்றால் நான் உன்னுடைய ஹோட்டலில் விட்டு விடவா” என்று நான் கேட்டேன்.

“நான் steady machi. என்னால் ஓட்ட முடியும். நீ கிளம்பவில்லையா” என்றான்

“எனக்கு இன்னும் கிக் ஏரல. நான் இன்னும் கொஞ்சம் ஏத்திக்கிட்டு கிளம்பறேன். தனியா போற. பார்த்து போடா. சந்தோஷமா போடா. இனிமே உன்னை எப்ப பார்க்க போறேன் என்றே தெரியவில்லை” என்று நான் கூறினேன்.

“டேய் நான் என்ன அமெரிக்காவுகா போறேன். இன்னும் ஒரு வாரத்தில் சென்னை வந்து விடுவேன். சென்னையில் சந்திக்கலாம். ஆனா நீ தான் இருப்பியானு தெரியலை” என்று ராஜேஷ் சொன்னான்.

“நான் நிச்சயமாக இருப்பேன். ஆனால் சென்னையா அல்லது வேலூரா அல்லது மும்மையா என்று தான் தெரியவில்லை. Good bye. Thanks for everything” என்று நான் சொன்னேன்.

“Good bye. Have a great journey" என்று அவன் சொன்னான்.

நன்றாக மது அருந்தினேன். பிறகு என்னுடைய இன்னொரு நண்பன் ரவிக்கு போன் செய்தேன்.

“டேய். ஆபிஸ்ல தானே இருக்க” என்றேன் நான்.
“ஆமாம் டா” என்றான் அவன்.
”பக்கத்தில் இருக்கும் பாருக்கு வாடா. எனக்கு நன்றாக போதை ஏறிவிட்டது. என்னால் நடக்க கூட முடியவில்லை” என்று கேட்டேன் நான்.
“வரேன் டா” என்றான் அவன்.

“மச்சி. அறிவில்லை உனக்கு. இப்படியா குடிப்பது. வா வா. எந்த ஓட்டலில் தங்கி இருக்கிறாய். உன்னை taxi இல் ஏத்தி விட்டு உன் காரை நான் எடுத்துச் செல்கிறேன். நாளை காலை என் வீட்டிற்கு வந்து உன் காரை எடுத்து செல்”,என்றான் அவன்.

“நன்றி மச்சி. Hotel Sky டா" என்றேன் நான்.

”ஹோட்டலுக்கு சென்று நன்றாக தூங்கினேன். காலையில் டிவியில் செய்தி பார்தேன், மலையில் இருந்து காரோடு கீழே விழுந்த வாலிபன் மரணம் என்றும் அவன் பெயர் ராஜேஷ் என்றும் கூறினார்கள்”.

செத்தது என் நண்பன் தான் என்பது உறுதி ஆனது.

என் நண்பன் ரவியிடம் போன் வந்தது, “மச்சி என்ன டப்பா காரு டா நீ வாடகைக்கு எடுத்த? உன் காரை எடுத்துக் கொண்டு நான் சென்ற போது காரில் பிரேக் பிடிக்கவில்லை. நல்ல வேலை ஒரு மரத்தில் முட்டி நிறுத்து விட்டேன். எனக்கு சிறு காயம் தான். நான் இப்போது மருத்தவமனையில் இருக்கிறேன். போலீஸ் நிலையத்திற்கு சென்று காரை வாங்கிக் கொள்” என்று கூறினான்.

“அய்யோ. இரு டா நான் மருத்துவமனைக்கு வருகிறேன்” என்று சொல்லி போனை வைத்தேன்.

“அட பாவி ராஜேஷ் உன்னை கொல்வதற்கு நான் உன் கார் பிரேக்கை கட் செய்தேன். நீயோ என்னை கொல்வதற்கு என்னுடைய கார் பிரேக்கை கட் செய்திருக்கிறாய். நீ போன் பேச வெளிய போனீயே, அப்ப தான் பிரேக்கை கட் செய்தாயா? நானும் போன் பேசுவதை போல் வெளியில் சென்ற போது தான் உன் கார் பிரேக்கை கட் செய்தேன். எப்படியோ நான் தப்பித்தேன். என் நண்பன் ரவியும் தப்பித்தான். ஆனால் நீ செத்து விட்டாயே.... haahaaa." என்று ஆரவாரமாக சிரித்தேன்.

செய்த தவறை ஏற்றுக் கொண்டு மறுநாள் போலீசில் சரணடைந்தேன். ஒரு புறம் மகிழ்ச்சி தான் என்றாலும், மறு புறம் ஆழ்ந்த கவலையும், பயமும் என்னுடைய மனதை சூழ்ந்தது. என்னுடைய நண்பனையே கொல்ல வேண்டியதாய் போயிற்றே. அவன் என் நண்பன் என்பதால் தான், என் கையில் கொல்லாமல், காரால் கொலை செய்தேன்.

அழுதேன், அழுதேன். ”என்னை கொலை செய்ய வைச்சிட்டீயே டா. பாவி. என்னை கொலை செய்ய நீ துணிந்தாயே? நான் உனக்கு என்ன டா துரோகம் செய்தேன்.
உயிர் நண்பனை போல தானே நான் உன்னை மதித்தேன்.” என்று அழுது புலம்பினேன். அப்படி என்ன பகை அவன் மேல். அப்படி என்ன கொலைவெறி அவன் மேல்.
அவனும் என்னை கொல்ல முயற்சி செய்திருக்கிறானே. அவனுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்?

விடை தெரிய செல்வோம் சில வருடங்களுக்கு முன்னர்.....

[சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னால்]

சென்னையில் என்னுடைய மாஸ்டர்ஸ் முடித்து விட்டு பிஎச்டி யில் படித்துக் கொண்டிருந்த காலம். “Masters in Network Security and Cryptography" படிப்பை முடித்தேன். முதல் மாணவனாக பரிசும் பெற்றேன். பிறகு, “Phd in Ethical Hacking" படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தந்தை ரீயல் எஸ்டேட் மற்றும் பீல்டிங் துறையில் கொடிக்கட்டி பறந்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த காலம்.

ஷாலினி, ஷாலினி. ஆம் ஷாலினி என் வாழ்கையில் வந்த காலம் அது. ஒரு முறை என்னுடைய ஆசிரியர், “இன்றைக்கு நான் ஒரு வகுப்புக்கு செல்ல வேண்டும். என்னால் செல்ல முடியாது. நீ வகுப்பைப் பார்த்துக் கொள். உனக்கு விருப்பம் இருந்தால் உன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றி அவர்களுக்கு பாடம் எடு. உன்னை போல் பல அறிவாளிகள் உருவாக உன் பாடம் ஒரு காரணமாக இருக்கட்டும்” என்று சொன்னார்.

”சரி” என்று நான் சொல்லி வகுப்பறைக்கு சென்றேன். பாடம் எடுக்க தொடங்கினேன். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு மாணவி, “Excuse me! May I come in sir" என்றாள்.
நான் கோபமாக அவளை பார்த்து, “இது தான் வகுப்புக்கு வரும் நேரமா. உன்னை அனுமதிக்க முடியாது” என்றேன்.

”சார். பிலீஸ் சார். வர வழியில் டிராபிக் ஜாம். அதான் சார் லேட். உங்கள் ஆராய்ச்சியை பற்றி ஆசிரியர்கள் பெருமையாய் கூறியிருக்கிறார்கள். உங்கள் வகுப்பை நான் இழக்க வரும்பவில்லை. என்னை அனுமதியுங்கள்”, என்று சிறு குழந்தையை போல் கண்களில் தண்ணீர் ததும்ப ஏக்கமாய் என்னை பார்த்து கேட்டாள்.

அந்த ஒரு பார்வையில் நான் விழுந்தேன். காதலில் விழுந்தேன். ”come in" என்றேன்.

இப்படி தான் அவள் மீது எனக்கு காதல் மலர்ந்தது. பிறகு அடிக்கடி அவள் என்னுடைய ஆராய்ச்சிக்கூடத்திற்கு வந்து சந்தேகங்கள் கேட்பாள். நான் ஒரு நாள் மிகவும் தைரியமாய் அவளிடம் கேட்டேன், “உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உன்னை கல்யாணம் செய்ய விரும்புகிறேன். உனக்கு ஒகே என்றால் சொல்லு. உன் பெற்றோர்களிடம் என் பெற்றோரை பேச சொல்கிறேன்” என்று நான் கூறினேன்.

அவளுக்கும் என்னை பிடித்திருந்தது. சரி என்று சொன்னாள். இரண்டு வருடம் எங்களுடைய காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாய் சென்றது. எங்களின் அன்பு, பாசம் மிகவும் அதிகமானது. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழவே இயலாது என்று அளவுக்கு எங்கள் காதல் வலிமை பெற்றது.

ஒரு நாள், இந்திய அரசாங்கத்தில் இருந்து ஒரு உயர்ந்த அதிகாரி எனக்கு போன் செய்தார், “உங்களை பற்றி நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். உங்களுடைய சேவை நம் நாட்டிற்கு இப்போது தேவை. நம்முடைய அரசாங்க இணையதளங்களை(websites) ஒன்றன் பின் ஒன்றாக நாசக்காரர்கள் அவர்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று அழித்து வருகிறார்கள். இதை தடுத்தாக வேண்டும். நாங்கள் இந்த துறையில் கைதேர்ந்தவர்கள் பலரை தேர்ந்து எடுத்து இருக்கிறோம். நீங்கள் தான் அவர்களுக்கு தலைவராய் இருந்து நாசக்காரர்களிடம் இருந்து நம் நாட்டின் இணையதளங்களை காப்பாற்ற வேண்டும். என்ன சொல்லுகீறீர்கள்? உங்களுக்கு சம்மதம் தானே” என்றார் அவர்.

“நம் நாட்டிற்கு செய்ய போகும் இந்த வேலையை நான் மிகவும் சரியாக முடிப்பேன்.” என்றேன் நான்.

“நல்லது. நீங்கள் நாளை காலை தயாராய் இருங்கள். நாங்கள் வந்து உங்களை அழைத்து செல்வோம். இந்த பணி முடிய ஒரு வருடம் வரை ஆகும், அந்த ஒரு வருடத்தில் உங்கள் பாதுகாப்பு கருதி நீங்கள் யாருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்க மாட்டோம். உங்கள் பெற்றோரிடம் அவசர வேலையாக வெளிநாடு போகிறேன் என்றும் திரும்புவதற்கு ஒரு வருடம் ஆகும் என்றும் கூறிவிடுங்கள். முக்கியமாக அந்த ஒரு வருடம் தொடர்பு கொள்ள இயலாது என்றும் கூறி விடுங்கள்” என்றார்.

“சரி” என்று சொல்லிவிட்டு நான் போனை வைத்து விட்டேன். அம்மா, அப்பா மற்றும் என் காதலியின் போனிற்கு இரவு முழுவதும் மாறி மாறி கால் செய்தேன். கால் போகவே இல்லை. காலையும் வந்து விட்டது. என்னை அழைத்துச் செல்ல காரும் வந்து விட்டது. யாரிடமாவது சொல்லி விஷயத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

அப்போது தான் என் உயிர் நண்பன் ராஜேஷ் நினைவிற்கு வந்தான். அவனுக்கு போன் செய்து விவரம் சொல்லி என்னுடைய பெற்றோர்களிடமும், காதலியிடமும் கூறி விட சொன்னேன்.

காலையில் கார் வந்தது. நான் சென்று பணிகளை தொடங்கினேன். மூன்று மாதங்கள் ஓடியது. பெற்றோர், காதலியை பிரிந்த வலி என்னை மிகவும் வேதனை படுத்தியது. வேலை செய்ய முடியவில்லை. பல தடவை கெஞ்சி அனுமதி கேட்டு பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு சென்றேன். யாருக்கும் போன் செய்ய கூடாது என்ற கட்டளையுடன் தான் என்னை அனுப்பி வைத்தார்கள். கோயிலில் நான் உட்கார்ந்து இருந்தேன். அப்போது ஒரு மர்ம மனிதன் ஓடி வந்து என்னை கத்தியில் குத்த முயற்சி செய்தான். நான் சுதாரித்துக் கொண்டு அவனை தடுத்தேன். மண்ணை எடுத்து அவன் முகத்தில் வீசி விட்டு நான் ஓடி விட்டேன். அவன் முகம் என்னுடைய மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

ஒரு வருடம் ஓடி விட்டது. எனக்கு அளிக்கப்பட்ட வேலையை வெற்றிக்கரமாக முடித்து விட்டேன். அனைவரும் என்னை பாராட்டினார்கள். இந்திய பிரதமர் எனக்கு போன் செய்து நன்றி சொன்னது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம். என்னுடைய வீட்டிற்கு கிளம்பினேன். ஒரு வருடம் கழித்து என்னுடைய பெற்றோரைப் பார்க்க போகிறேன். என் ஆசைக் காதலியை பார்க்க போகிறேன். சந்தோசத்தின் உச்சித்தில் இருந்தேன். வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டி இருந்தது. அருகில் இருக்கும் ஒரு நண்பன் வீட்டிற்கு சென்றேன்.

“டேய். வாடா. அறிவில்லையா டா உனக்கு? எங்க டா போன? எங்களை விட்டு செல்ல எப்படி டா உனக்கு மனசு வந்தது? நிம்மதியை தேடி போனீயே. கிடைத்ததா? ” என்றான் அவன்.

”என்ன டா சொல்ற. வெளியுருக்கு போறேன் என்று சொல்லிவிட்டு தான் டா போனேன்” என்றேன் நான்.

“என்ன உளருகிறாய்.” என்றான் என் நண்பன்.

“நான் உளரவில்லை. நீ தான் உளருகிறாய். ஏன் வீடு பூட்டி இருக்கிறது. அம்மா, அப்பா எங்கே? அதை முதலில் கூறு” என்றேன் நான்.

“உன் அப்பா, அம்மா, ஷாலினி திருப்பதிக்கு சென்றிருக்கிறார்கள். வருவதற்கு மூன்று நாள் ஆகும். உன் பெற்றோர்களின் தத்து பிள்ளை ராஜேஷ் தொழில் விஷயமாக மும்பை சென்றிருக்கிறான்” என்றான்.

“ராஜேஷ் தத்து பிள்ளையா? என்ன டா சொல்ற? எனக்கு தலையே சுற்றுகிறது. ஆரம்பத்தில் இருந்து நீ பேசுவது எனக்கு வினோதமாகவும், பயம் அளிப்பதாகவும் இருக்கிறதே. இங்கே என்ன டா நடக்குது.”,என்று நான் பதற்றுடன் கேட்டேன்.

“மச்சி நீ தான் நிம்மதியை தேடிப் போனல. அதான் எல்லாத்தையும் மறந்துவிட்டாய். நான் கூறுகிறேன். நீ இல்லாத இந்த ஒரு வருடத்தில் இங்கு என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன்” என்று கூறத் தொடங்கினான்.

“ஒரு வருடத்திற்கு முன்னால் ராஜேஷ் நீ கொடுத்ததாக ஒரு கடித்தை உன் பெற்றோரிடம் கொடுத்தான். அந்த கடிதம் இப்போது என்னிடம் தான் இருக்கிறது. உன் கடிதத்தை நீயே படித்து பார்” என்று கடிதத்தை என்னிடம் நீட்டினான்.

படிக்கத் தொடங்கினேன். படித்து முடித்ததும் என் இதயமே நின்று விட்டது போல் இருந்தது. என் கண்கள் இருண்டு விட்டன. எனக்கு தலைசுற்றி மயக்கம் போட்டு விழுந்தேன்.

அந்த கடிதத்தில் இருந்தது என்ன? படியுங்கள்.

“அம்மா, எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. நான் நிம்மதியை தேடிச் செல்கிறேன். நான் திரும்ப வரமாட்டேன். நீங்களும் அப்பாவும் தனியாக இருப்பதை நான் விரும்பவில்லை. என்னுடைய நண்பன் ராஜேஷ் மிகவும் நல்ல பையன். அவனை நீங்கள் தத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவன் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வான். என்னுடைய கவலை இல்லாமல் நிம்மதியாய் இருங்கள். என்னை மன்னித்து விடுங்கள். என் உயிரை போல் கருதும் என் காதலி ஷாலினியிடம் விஷயத்தை சொல்லுங்கள். அவள் தற்கொலை செய்ய முயற்சிப்பாள். அவள் மனதை மாற்றுங்கள். ராஜேஷுக்கு ஷாலினியை திருமணம் செய்து வைய்யுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் நான் நிம்மதியை தேடிச் செல்கிறேன்.”

என் முகத்தில் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பினான் என் நண்பன்.
“மச்சி. எழுந்திரு டா. வா டாக்டரிடம் செல்லலாம்”, என்றான் என் நண்பன்.
”அதுக்கு அப்புறம் என்ன நடந்தது என்று கூறுடா” என்று நான் சொன்னேன்.

”நீ கூறியதால் உன் பெற்றோர் ராஜேஷை மகனாய் தத்து எடுத்தார்கள். ஷாலினியை ராஜேசுக்கு திருமணம் செய்து வைக்க முயறிசித்தார்கள். முதலில் சில மாதங்களுக்கு ஷாலினி ஒத்துக் கொள்ளவில்லை. நீ கடிதத்தில் சொன்ன ஒரே காரணத்தினால், மனமில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள். கடந்த வாரம் தான் திருமணம் நடந்தது. நீ சென்ற நாளில் இருந்து இன்று வரை ஷாலினியின் முகத்தில் யாரும் சிரிப்பை
பார்க்கவே முடியவில்லை. உன் நினைவில் உன்னை எண்ணி எண்ணி தனக்குள்ளே வருந்துகிறாள். அவளை விட்டு போக எப்படி டா மனசு வந்தது” என்றான் என் நண்பன்.

“என் நண்பா ராஜேஷ். உனக்கு நான் என்னடா துரோகம் செய்தேன். என் வாழ்கையில் இப்படி விளையாடிவிட்டாயே. என் தலையில் இடியை தூக்கு போட்டு விட்டாயே” என்று என் மனதிற்குள்ளே நான் சொன்னேன்.

என் நண்பனிடம் ராஜேஷின் சதி வேலகளை பற்றி நான் கூறவில்லை.

“நான் ஒரு வேலையா மும்பை போறேன் டா. ராஜேஷ் எந்த ஓட்டலில் தங்கி இருக்கிறான்”, என்று அவனிடம் கேட்டேன்.

“ஹோட்டல் ராணி” என்றான் அவன்.

அவனிடம் விடை பெற்று கிளம்பினேன். மனம் உடைந்து தெருவில் சுற்றினேன். அப்போது என்னை கொலை செய்ய முயற்சி செய்த அந்த மர்ம நபரை தெருவில் பார்த்தேன்.
ஏற்கனவே மனம் உடைந்து விரக்தியின் உச்சத்தில் இருந்தேன். இதில் அவனை பார்த்தவுடன் என் கோபம் பல மடங்காய் ஆனது. பயம் என்ற ஒன்று என் மனதில் துளி அளவு கூட இல்லை. வெறி பிடித்த நாயை போல அவனை துரத்தினேன். அவன் என்னை பார்த்து ஓடினான். ஒரு வழியாக அவனை பிடித்தேன். கை வலிக்கும் வரை அவனை அடித்து தீர்த்தேன். அவன் முகம் கிழிந்து இரத்தம் கொட்டியது.நம் சென்னை மக்கள் மிகவும் நல்லவர்கள். அவரவர் வேலையில் மும்முரமாய் இருந்தார்கள். என்னை யாரும் தடுக்கவும் இல்லை.

”எதற்காக என்னை கொல்ல முயற்சி செய்தாய்.” என்று நான் அவனை கேட்டேன்.
”ஒருவன் என்னிடம் பணம் கொடுத்து உன்னை கொல்ல சொன்னான்.” என்றான் அவன்.

“யார் அவன்?”
“அவன் யார், என்ன பெயர் என்று தெரியாது. அவன் போட்டோ என் cell phone இல் இருக்கு” என்று கூறி போட்டோவைக் காண்பித்தான்.

“ராஜேஷ் நீயா?”
என்னை தூக்கி போட்டது. என் உயிரை பிழிந்து எடுத்தது.

”ராஜேஷ்!!! நீயா!!!! என் பெற்றோர்களை ஏமாற்றினாய், என் காதலியை ஏமாற்றினாய். இதன் உச்சமாக என்னை கொலை செய்யவும் ஆள் அனுப்பி இருக்கிறாய். அய்யோ என் இரத்தம் கொதிக்கிறதே. உன்னை என் உயிர் நண்பனை போல நடத்தின எனக்கு அருமையான கைமாறு செய்தாய். இப்போதே வருகிறேன். உன்னை கொலை செய்தால் தான் என் ஆத்திரம் அடங்கும்.” என்று நான் கிளம்பினேன்.

இரு கடிதங்கள் எழுதினேன். ஒன்று பெற்றோர்களுக்கு, மற்றொன்று காதலிக்கு.

“அம்மா, அப்பா என் நண்பன் ராஜேஷ் என்னை ஏமாற்றி விட்டான். உங்கள் எல்லாரையும் ஏமாத்தி விட்டான். நான் அவனை கொலை செய்ய போகிறேன். எனக்கு எப்படியும் 10 அல்லது 15 ஆண்டு தண்டனை கிடைக்கும். தண்டனை காலம் முடிந்து நான் வருவேன். மீண்டும் நாம் எல்லாரும் ஒன்றாய் சந்தோஷமாக இருக்கலாம். எனக்காக காத்துக் கொண்டிருங்கள். நீங்கள் காத்து கொண்டு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நான் வேட்டையாட செல்கிறேன்”

“என் உயிரே ஷாலினி, என் நண்பன் அதாவது உன் கணவன் ராஜேஷ் எல்லாரையும் ஏமாற்றிவிட்டான். உன் கணவனை நான் கொல்லப் போகிறேன். என் மனதில் இன்னும் நீ தான் இருக்கிறாய். நான் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து வருவேன். அப்போது உன் மனதில் எனக்கு ஒரு இடம் இருந்தால் நம் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாய் வாழலாம். உன் மனதில் இந்த கொலைகாரனுக்கு இடம் இல்லாவிடில் உன் நினைவுகளுடனே நான் வாழ்வேன். வருகிறேன்”

நடந்தது முடிந்தது.
நிகழ்காலத்திற்கு வாருங்கள்..

இப்போது புரிகிறதா. நான் ஏன் கொலை செய்தேன் என்று? இது சரியா, தவறா என்று மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

என்னை பொறுத்தவரை நான் செய்தது சரிதான். அந்த மிருகத்தை உயிராடு விட்டால் இன்னும் பல பேரை ஏமாற்றியிருக்கும், பல பேர் வாழ்வில் விளையாடியிருக்கும். அதை தடுக்கவே நான் அவனை கொலை செய்தேன்.

நான் என்னுடைய நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் பெற்றோரிடம் இணையப் போகும் அந்த நாள். என் காதலியின் முகத்தை பார்க்க போகும் அந்த நாள். அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா என்று தெரியப்போக்கும் அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
- ராகுல்

6 கருத்துகள்:

Kodungal. R.P சொன்னது…

It's a good story. i like it. best of luck.

பெயரில்லா சொன்னது…

It's a good short story. best of luck.

Unknown சொன்னது…

nice.... but?????????????/

suvi சொன்னது…

wow, excellent short story! am sure this can be a movie! i think you should start to market yourself...soon!

Dhipan சொன்னது…

Very nice anna :)

Dhipan சொன்னது…

Super anna :)

Post Top Ad

Your Ad Spot

Pages