இது கற்பனைக் கதை அல்ல. என்னுடைய வாழக்கையில் நடந்தது.
என்னுடன் நான்கு வருடமாக இருந்த என் காதலி, நேற்று முதல் உடல் நலம் சரியில்லாமல் தவிக்கிறாள். அவளை பிரிந்து நான் எப்படி வாழ்வேன்? கடவுளே, அவளை குணப்படுத்தி விடு...
தினமும் காலையில் நான் கிளம்பி வெளியில் செல்வது முதல், இரவு நான் வீட்டிற்கு வரும் வரை என்னுடனே இருப்பாள். நான் பஸ்ஸில் சென்றாலும் சரி, ரயிலில் சென்றாலும் சரி, பைக்கில் சென்றாலும் சரி, அவள் தவறாமல் என்னுடனே வருவாள். நான் சோகமாக இருக்கும் போது பாட்டு பாடி என்னை சமாதானபடுத்துவாள். நான் சந்தோசமாக இருக்கும் போது பாட்டு பாடி என்னுடைய சந்தோஷத்தில் பங்கு எடுப்பாள்.
நான் இரவு தூங்கும் போதும் அவள் பாட்டைக் கேட்காமல் தூங்குவதே இல்லை. நான் தூங்கிய பிறகும் அவள் தன்னுடைய பாட்டை நிறுத்துவதே இல்லை. நான் இரவில் எப்போதாவது விழித்தால், நான் சொன்னால் மட்டுமே அவளுடைய பாட்டை நிறுத்துவாள். அவளுக்கு தான் என் மீது எவ்வளவு பாசம், அன்பு!
என்னவாயிற்று அவளுக்கு? நேற்று வழக்கம் போல் நான் பஸ்ஸில் சென்று கொண்டு இருந்த போது, பாட்டு கேட்கனும் போல் தோன்றியது. அவளை பாட சொன்னேன். ஆனால் அவள் பாடவில்லை. திரும்ப திரும்ப சொல்லியும் அவள் பாடவில்லை. சிறிதி நேரம் கழித்து தான் அவள் உடல் நலம் சரியில்லை என்று தெரிந்து கொண்டேன். கவலையில் முழுகினேன். அவள் மீண்டும் நல்லபடியாக குணமாக வேண்டும், எனக்காக பாட்டு பாட வேண்டும் என்று கடவுளை நான் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
”ஒரு காதலி போனால் மறு காதலியை தேடிப் போகும் இந்த காலத்தில், காதலியை நினைத்து வருந்தும் உங்களை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் காதலின் வலிமை எங்களுக்கு புரிகிறது. உங்கள் காதலியை நீங்கள் முதன் முதலாய் எங்கு பார்த்தீர்கள். எப்படி உங்களுக்குள் காதல் மலர்ந்தது?” என்று நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு இதோ விடை...
என் அண்ணன் மூலமாகவே அவள் எனக்கு பழக்கமானாள். என்னுடைய அண்ணன் 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்த போது, அவளும் உடன் வந்தாள்.அவளை பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் அரும்பியது. இப்படி தான் காதல் தொடங்கியது. அதன் பிறகு நான்கு வருடமாய் அவளை நான் காதலித்து வருகிறேன்.
”அவளுடைய பெயர் என்ன என்று சொல்லுங்களேன்”, என்று நீங்கள் என்னை கேட்கீறீர்கள்.
அவளின் பெயர் "Sansa Ipod".
ஆம் அவள் தான் நான் என்னுடைய காதலி.
“என்ன டா இவன் லூசா இருப்பான் போல!! ஒரு ipod க்கு போய் இவ்வளவு வருத்தப்படறான்” என்று நினைக்கீறீர்களா?
என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் பொருள்களை நான் உயிரற்ற பொருட்களாக என்றுமே நினைப்பதில்லை. என்னுடனே வாழும் உயிரினங்களாகவே நான் நினைப்பேன்.
நம்பிக்கை என்ற ஆச்சானியில் தான் இந்த வாழ்க்கை என்ற சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது. நானும் அவள் குணமாகி வந்து மீண்டும் எனக்காக பாட்டு பாடுவாள் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறேன்.
திங்கள், 11 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
2 கருத்துகள்:
Good Concept
super concept with twist
கருத்துரையிடுக