Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சிவாஜியின் புதிய பறவை

ஜூலை மாதம் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளில் அந்த அற்புத நடிகனுக்கு மரியாதை செலுத்த சாந்தி தியேட்டர் ”புதிய பறவை” படத்தை இரண்டு வாரத்திற்கு திரையிட்டது.

நான் அந்த நேரத்தில் சென்னையில் இருந்ததால் அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்து பாட்டுகளும் மிகவும் அருமையாக இருந்தன.
மெல்லிசை மன்னன் விஸ்வனாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.

ஒரு பாடலில் இந்த வரிகள் வந்த போது காதை கிழிக்கும் அளவுக்கு விசில் சத்தமும், கைதட்டலும் வந்தது.

“கண்ணை படைத்து
பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே”

சிவாஜியின் நடிப்பை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? என்ன ஒரு நடிப்பு!! மற்ற நடிகர்களும் பிரமாதமாக நடித்து இருந்தார்கள். பெரும்பாலான காட்சிகளில் சிவாஜியின் நடிப்புக்கு பெரும் கைதட்டல் வந்தது. விறுவிறுப்பான கதை, இறுதிக்கட்ட காட்சியில் சிவாஜி, சரோஜா தேவியிடம் பேசும் வசனங்கள் அனைவரின் கண்களையும் கலக்கிவிடும்.இப்படத்தை நீங்கள் பாருங்கள்! உங்களுக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages