Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

காதல் ஜெயித்திடும்!!

மழைகாலம் வெயில்காலம்
எது வந்தாலும் உன் நினைவுகள்

காலை மாலை மாறி மாறி வரும்
உன் நினைவு மட்டும் மாறாமல் வரும்

நேற்று போனது இன்றும் போய் விடும்
உன் நினைவு என்றும் போகாது

ஆட்சி மாறிடும் ஊரும் மாறிடும்
நம் காதல் என்றும் மாறாது

மல்லிகை சந்தனம் வாசம் மாறிடும்
நம் காதல் வாசம் என்றும் மாறாது

நட்பு மாறிடும் காதல் ஆகிடும்
காதல் மாறிடும் நட்பு ஆகிடும்
நம் காதல் என்றும் மாறாது

மேகம் வந்ததும் வானம் கருப்பு ஆகிடும்
எது வந்தாலும் நம் காதலின் நிறம் மாறாது

தண்ணீர் பட்டதும் மண்ணும் ஓடிடும்
கண்ணீர் வந்தாலும் நம் காதல் நிலைத்திடும்

சில காதல் தோற்றிடும்
அதில் நம் காதல் இல்லை

பல காதல் ஜெயித்திடும்
அதில் நம் காதல் உண்டு

மழைகாலம் வெயில்காலம்
எது வந்தாலும் உன் நினைவுகள்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages