தேடினேன் நான் தேடுகிறேன்
வெகுநாளாய் நானும் தேடுகிறேன்
என் வரிகளை பாடலாய் கேட்கும்
ஆசையில் நான் பாடகர்களை தேடுகிறேன்
தேவையே கண்டுபிடிப்புக்கு கருவி
அது தான் என்னையும் பாட வைத்தது
நான் பாடிய பாடல்கள்
என் ஐபாடில் மட்டும் தான் ஒலிக்கும்
இல்லையென்றால் என்னை திட்டி
பல மெயில்கள் படை எடுக்கும்
பாடத் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்
பாடுவதற்கு ஏனோ அவர்கள் மறுக்கிறார்கள்
வேலை செய்கிறோம் பணம் சம்பாதிக்கிறோம்
அதெல்லாம் சரி தான்
ஆனால் அது மட்டும் தான் வாழ்க்கையா?
அது நிச்சயம் இல்லை
அது உங்களுக்கு தெரிந்தும்
வட்டத்தில் இருந்து வெளிவர முயலவே இல்லை
நாம் அலுவலகத்தில் செய்யும் சாதனை
நம் பதவி காலம் முடியும் போது
காற்றில் பறந்து போகும்
அதை தாண்டி பல தலைமுறை வரை
நம் சாதனை வாழ வேண்டாமா?
நம் மறைவிற்கு பிறகு நம் சந்ததிகள்
நம்மை பற்றி பேச வேண்டாமா
அதை கேட்டு நம் ஆத்மா
திருப்தி அடைய வேண்டாமா?
நம் வாழ்ந்து காட்டி விட்டோம்
என்று கர்வம் கொள்ள வேண்டாமா?
தேடினேன் நான் தேடுகிறேன்
வெகுநாளாய் நானும் தேடுகிறேன்
திங்கள், 29 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக