உலகமே ஒரு நாடக மேடை
அதில் நடிக்க வந்த நடிகர்கள் நாமே
நடிக்க வேண்டிய காலம் சிறியதே
எனினும் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமான நடிப்பே
எவ்வளவு யதார்த்தம் நம் நடிப்பில்
நாம் நடிகர்கள் என்று யாருக்கும் தெரிவதே இல்லை
நமக்கு கூட தெரிவதில்லை
தன்னுடன் ஒன்றாய் படித்த நண்பன்
வேலைகிடைத்து செல்வச் செழிப்பில் பறக்கும் போது
மனதில் தாழ்மை உணர்ச்சி இருந்தும்
அழகாய் சிரித்து நடிக்கும் நடிகர்களும் உண்டு
ஆசை காதலி வேறு ஒருவனை திருமணம் செய்யும் போது
மனதில் ஈட்டியால் குத்துவது போல் இருந்தும்
எங்கிருந்தாலும் வாழ்க என்று யதார்த்தமாய் வாழ்த்தும் நடிகர்களும் உண்டு
உலகமே ஒரு நாடக மேடை
அதில் நடிக்க வந்த நடிகர்கள் நாமே
லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் போதும் கூட
ஏதோ ஒரு வெறுமை மனதை அரிக்கும் போது
யதார்த்தமாய் மகிழ்ச்சியாய் இருப்பது போல் நடிக்கும் நடிகர்களும் உண்டு
எவ்வளவு நடிகர்கள் நம்முடன்
ஒவ்வொரு நடிகரும் ஒரு விதம்
நாடக மேடை என்பதை மறந்து
பொறாமை, பேராசை, மண்ணாசை, பெண்ணாசை என்று
ஆயிரம் தீய குணங்களை கைபிடிக்கும் நடிகர்களும் உண்டு
நம்முடைய இயக்குனர் சொல்லாத பல காட்சிகளை
அரங்கேற்றும் நடிகர்களும் உண்டு
நம்மை நாடக மேடைக்கு அனுப்பிய இயக்குனர்
இவன் நடித்து சாதித்தது போதும் என்று
திரும்ப அழைக்கும் நாள் அருகில் தான் என்று தெரியாமல் இருக்கும் நடிகர்களும் உண்டு
இயக்குனர் தீர்மானித்த இறுதிக் காட்சி வரை செல்வோமோ?
நம் நடிப்பை பார்க்க முடியாமல் கலங்கி,
இயக்குனர் இறுதிக் காட்சியை முன் இழுத்து நம் நடிப்பை முடிப்பாரோ?
எப்படியாவது முடியட்டும் நம் நடிப்பு
இறுதி வரை யதார்த்தமாய் நடிப்போம்
இயக்குனர் பரிசு தருகிறாரா
அல்லது வேடம் கொடுத்ததே தப்பு என வருந்துகிறாரா
என்பதை நம் காட்சி முடிந்ததும் பார்ப்போம்
வியாழன், 25 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
1 கருத்து:
very great,,now i relize life,,
கருத்துரையிடுக