உன்னை ஒரு முறை பார்த்தேன்
பின் பல முறை பார்க்கிறேன்
உயிருள்ள வரை தொடர்ந்து நான் பார்ப்பேன்
என் உயிர் போனாலும் உன்னை நான் பார்ப்பேன்
என் உயிரால் உன்னை நான் பார்ப்பேன்
உடல் வெறும் கூடு தானே
சதையால் செய்யப்பட்ட வெறும் கூடு தானே
அது எரிந்து போனாலும் கூட
உன்னை நான் தொடர்ந்து பார்ப்பேன் பெண்ணே
அன்பு காதல் என்றும் இளமை
ஆயுள் முடிந்தாலும் அது என்றும் பசுமை
முதுமையினால் அழியாது நம் காதல்
பல தலைமுறை பிறகும் பேசப்படும் நம் காதல்
உன்னை ஒரு முறை பார்த்தேன்
பின் பல முறை பார்க்கிறேன்
உயிருள்ள வரை தொடர்ந்து நான் பார்ப்பேன்
விடி காலையில் எழுவது நரகம் எனக்கு
எழுகிறேன் நீ பேருந்து நிலையம் வருவாய் என்று
சுவரை முட்டிக் கொண்டாலும் பாடம் ஏறாது எனக்கு
இன்று பெரிய படிப்பெல்லாம் முடித்தேன் உன்னால்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
பறக்குது பட்டாம்பூச்சி
லேசாகுது என் மனசு
உன்னை கைபிடிப்பது எப்போது
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் இப்போது
விரைவில் நடக்கும் நம் திருமணம்
அன்று முதல் என் கண்களுக்கு ஒய்வில்லை தினம் தினம்
உன்னை ஒரு முறை பார்த்தேன்
பின் பல முறை பார்க்கிறேன்
உயிருள்ள வரை தொடர்ந்து நான் பார்ப்பேன்
திங்கள், 22 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக