சென்னையில் இருந்து கிளம்பி மும்பையில் இறங்கி, அடுத்த விமானம் பிடித்து Frankfurt சென்றடைந்தேன். அங்கிருந்து சுவிடன் செல்லும் விமானம் பிடிக்க வேண்டும். அதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கின்றது.
அப்போது என் அண்ணன் மகனின் நினைவு என் மனதை கிள்ளியது. கடந்த மூப்பத்தைந்து நாட்களும், அவனுடைய சத்தம் கேட்டு தான் நான் காலையில் எழுந்திருப்பேன். கள்ளம் கபடமற்ற அவனுடைய சிரிப்பில் என்னை மறந்து ஆனந்த கூத்தாடினேன். நான் வெளியில் இருந்து வந்ததும், என்னை கண்டு அவன் தவழ்ந்து வருவதும், அவனை தூக்கி விளையாடுவதும் இனி சில மாதங்களுக்கு இருக்காது என்று நினைக்கும் போது மனம் தவிக்கிறது. மனிதர்களுக்கு இருக்கும் ஒரே பலவீனம் பாசம். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? Frankfurt விமான நிலையத்தில் அவனை நினைத்து இதை எழுதுகிறேன்.
உன்னுடைய சிரிப்பில்
என் கவலை மறந்தேன்
கள்ளம் கபடமற்ற உன் சிரிப்பு
என்னுடைய வலிக்கு மருந்து
உன்னை தூக்கி கொஞ்சும் போது
இன்பக் களிப்பில் கூத்தாடினேன்
உன்னை விட்டு பிரியும் போது
என்னையே விட்டு பிரிந்தேன்
உன் சிரிப்பு இல்லாத இவ்விடத்தில்
என் வலிக்கு மருந்து எவ்விடத்தில்
உன்னிடம் விடை பெற்ற போது
என் அழுகைக்கு தடை போட முயன்ற போது
கவலையுடன் போராடியது என் மனம்
மூப்பத்தைந்து நாட்கள் எனக்கு சொர்க்கம்
மீண்டும் எப்பொழுது கிடைக்கும் அந்த சொர்க்கம்
இன்பம் நீடிப்பதில்லை
துன்பம் நீடிப்பதில்லை
இது இயறக்கையின் நீயதி
மூப்பத்தைந்து நாட்கள் பேரின்பமும்
நீடிக்கவில்லை முடிவுக்கு வந்தது
பிரிவு ஒரு புறம் என் மனதை கொல்லும் போதும்
ஒரு மாதம் உன்னுடன் கொஞ்சி மகிழ்ந்தேன் என்று மறு புறம் மனது தேற்றிக் கொள்ள முயற்சி செய்வதும்
விதியின் மாய விளையாட்டாகவே தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக