Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

புதன், 18 ஆகஸ்ட், 2010

காதல்


சூரிய ஒளி பூமியில் பட்டால் பயிர்கள் செழிக்கும்
உன் பார்வை என் மீது பட்டால் என் முகம் சிரிக்கும்

நட்சத்திரம் வானில் வந்தால் வானம் ஜொலிக்கும்
நீ என் வாழ்க்கை துணையாக வந்தால் என் வாழ்க்கை ஜொலிக்கும்

வானில் மேகம் நகர்வதை போல நீ
என் வாழ்வில் வந்தாயே

வானுக்கும் மேகத்துக்கும் இருக்கிற இடைவேளி போல நீ
என்னை விட்டு விலகி இருந்தாயே.

வேர் தண்ணீருக்கு காத்திருப்பதை போல நான்
உனக்காக காத்திருந்தேனே

தண்ணீரில் எண்ணெய் தனித்து இருப்பதை போல நீ
என்னை விட்டு தனித்தே நின்றாயே

சூரிய ஒளி பூமியில் பட்டால் பயிர்கள் செழிக்கும்
உன் பார்வை என் மீது பட்டால் என் முகம் சிரிக்கும்

நட்சத்திரம் வானில் வந்தால் வானம் ஜொலிக்கும்
நீ என் வாழ்க்கை துணையாக வந்தால் என் வாழ்க்கை ஜொலிக்கும்

மௌனம் அழகு என்பது உன்னிடம்
தான் தெரிந்து கொண்டேன்

கோபம் அழகு என்பது உன்
கோபத்தை கண்டு புரிந்து கொண்டேன்.

பிரிவு துயரம் என்று உன்
பிரிவில் தான் புரிந்து கொண்டேன்.

துயர நேரத்தில் நீ உதவும் போது
உன் பாசத்தை புரிந்து கொண்டேன்

உன் நினைவால் நான் என்னையே மறந்து
உன்னிடம் கைது ஆனதை புரிந்து கொண்டேன்

சூரிய ஒளி பூமியில் பட்டால் பயிர்கள் செழிக்கும்
உன் பார்வை என் மீது பட்டால் என் முகம் சிரிக்கும்

நட்சத்திரம் வானில் வந்தால் வானம் ஜொலிக்கும்
நீ என் வாழ்க்கை துணையாக வந்தால் என் வாழ்க்கை ஜொலிக்கும்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages