அம்மா என்ற வார்த்தையில்
தமிழ் என்னுடன் இணைந்தது
அன்று முதல் தமிழுடன் உள்ள
காதல் மங்காமல் தொடர்ந்தது
திருக்குறள் படிக்கும் போது
வள்ளுவன் மொழி என் மொழி என்று வியந்தேன்
ஐம்பெருங்காப்பியங்கள் படிக்கும் போது
எனக்கு தமிழ் தெரியும் என்று கர்வம் கொண்டேன்
கல்கியின் நூல்கள் படிக்கும் போது
எனக்கு தமிழர் வரலாறு தெரியும் என்று பெருமை கொண்டேன்
அறிவியல் பற்றி படிக்கும் போது
தாய்மொழியில் கற்று தரவில்லையே என்று ஏங்கினேன்
தமிழர்கள் இல்லாமல் எந்த நாடும் இல்லை
என்றறிந்து பெருமை கொண்டேன்
தமிழை செம்மொழியாய் அறிவித்தபோது
நான் தமிழன் என்று தலைநிமிர்ந்து நடந்தேன்
தமிழ் குடும்பம் தன் வீட்டில் ஆங்கிலம் மட்டும் பேசும் போது
தமிழ் நசுக்கப்படுவதை அறிந்து வருந்தினேன்
தாய்மொழி கொண்டே வளர்ந்தது பல நாடு
அது புரியாமல் வாழ்கிறது நம் நாடு
உப்பை உணவில் போடும் அளவிற்கு
ஆங்கிலத்தை வைத்துக்கொள்
உப்பே உணவானால் என்னவாகும்
என்பதை எண்ணிக்கொள்
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக