இந்த வீடியோவை பாருங்கள்
இதை பார்த்து விட்டு மனம் வருந்தி எழுத ஆரம்பித்தேன்.
வறுமை நோய் என்று ஒழியும்?
விடிவு காலம் என்று பிறக்கும்?
இன்டர்நெட், பேஸ்புக் என்று வாழும் மக்கள் ஒரு பக்கம்,
வறுமை, பஞ்சம் என்று வாடும் மக்கள் மறு பக்கம்
பார்ட்டி வைக்க காரணம் தேடிக் கொண்டிருக்கும் மக்கள் ஒரு பக்கம்,
சோறு கிடைத்தாலே அது பார்ட்டி என்று வாடிக் கொண்டிருக்கும் மக்கள் மறு பக்கம்
ஆசிரியர்கள், டியுசன் என்று இருந்தும் படிக்க வருந்தும் குழந்தைகள் ஒரு பக்கம்,
நம்மை யாராவது படிக்க வைக்க மாட்டார்காளா என்று ஏங்கும் குழந்தைகள் மறு பக்கம்
வறுமை நோய் என்று ஒழியும்?
விடிவு காலம் என்று பிறக்கும்?
புயல் மழையால் நமது outing திட்டம் பாதிக்குமோ என்று கலங்கும் மக்கள் ஒரு பக்கம்,
புயல் மழையால் நமது ஒலைக்குடிசை முழுகி விடுமோ என்று கலங்கும் மக்கள் மறு பக்கம்
தேர்தல் என்றால் என்ன என்று கேட்கும் மக்கள் ஒரு பக்கம்,
விடியற்காலையிலேயே ஒட்டைப் போட்டுவிட்டு அடுத்த தலைவன் நம்மை காப்பாற்ற மாட்டானா என்று காத்திருக்கும் மக்கள் மறு பக்கம்
அடை மழையில் காகித கப்பல் விடும் குழந்தைகள் ஒரு பக்கம்,
அடை மழையில் வீடே கப்பலாக செல்வதை பார்க்கும் குழந்தைகள் மறு பக்கம்
லட்சக்கணக்கில் சம்பாதித்தும் திருப்தியில்லாத மக்கள் ஒரு பக்கம்,
சம்பாதித்த பணம் ஒரு நாள் சோற்றுக்கு கூட போதவில்லையே என்று வருந்தும் மக்கள் மறு பக்கம்
வறுமை நோய் என்று ஒழியும்?
விடிவு காலம் என்று பிறக்கும்?
2 கருத்துகள்:
nice one.. Appreciate ur words here...
நன்றி சாமி
கருத்துரையிடுக