இராவணன் என்ற தலைப்பை மணிரத்தினம் அறிவித்த நாளிளேயே, அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. முன்பு துரியோதனன், கர்ணன் கதையை மையமாக கொண்டு தளபதி படத்தை தயாரித்தார். வெற்றி பெற்றார். இப்போது இராமன், இராவணன் கதையை மையமாக கொண்டு இராவணன் கதையை உருவாக்கி இருக்கிறார். மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள். ஒவ்வொரு மனிதனிற்குள் இராமன், இராவணன் இருக்கிறார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது. இதை பற்றி நான் எதாவது எழுத(கிறுக்க) வேண்டும் என்று நினைத்தேன். இதோ எழுதி இருக்கிறேன். நான் கவிஞன் இல்லை. அதை மனதில் பதித்து விட்டு இதை படித்து பாருங்கள்....
நான் நல்லவனா, கெட்டவனா
புரிய வை ஆண்டவா
சில நேரம் நல்லவன்
சில நேரம் கெட்டவன்
நல்லவனாய் இருப்பதும் தீயவனாய் இருப்பதும்
எப்படியோ நிகழ்கிறது எனக்கு தெரியாமலே
கண் இமைக்கும் நேரத்தில் கெட்டவனாகிறேன்
அது ஏன் என்று விளங்கவில்லை
புரிய வை ஆண்டவா
நான் நல்லவனா, கெட்டவனா
புரிய வை ஆண்டவா
பிறக்கும் போது இராமன் மட்டும் இருந்த என்னுள்
இப்போது அடிக்கடி இராவணன் வருவது ஏனோ
இராவணன் வரும் போது தீயதை செய்கிறேன்
இராமன் வரும் போது நல்லதை செய்கிறேன்
இராமனாகவே எப்போதும் இருக்க விருப்பம் ஆனால்
இராவணன் அடிக்கடி வருவது ஏனோ
என் பெயரை கெடுப்பதும் ஏனோ
இராமனாகவே எப்போதும் நான் இருக்க முடியாதா
புரிய வை ஆண்டவா
இராவணனை அழிக்க இராமன் வந்தார்
இராவணன் இல்லாமல் இராமாயணம் இல்லை
என்னுள் இராமன் வர இராவணன் இருப்பது அவசியமா
புரிய வை ஆண்டவா
நான் நல்லவனா, கெட்டவனா
புரிய வை ஆண்டவா
கண்கெட்ட பின் சூரிய நம்ஸ்காரம் செய்வது ஏனோ!
இராவணனால் நான் செய்த துன்பத்திற்கு இராமனாய் இருக்கும் போது வருந்துவது ஏனோ!
நான் நல்லவனா, கெட்டவனா
புரிய வை ஆண்டவா
7 கருத்துகள்:
abaram abaram neengal thaan adutha kaviperarasuuu
super...i think you need some percentage of ravanan in you in today's world for surviving...
prabhu.... umadhu kavi paadum thiramaikku yam adimai....
prabhu.. ummakku kavi paadum thiran patri naeril kuravellaiyae....
enninum yamadhu vazhthukal....
Sujith,
தமிழில் நன்றாக சிந்திக்க தெரியும். எழுத படிக்க தெரியும். மிகவும் பிடிக்கும். அவ்வளவு தான். எனக்கு கவிதை மாதிரி ஏதாவது எழுத வருகிறதா என்று தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
Hi,
you may be "RAMA" or "RAVANA"..It all about choosing your "SITA"....It was the only difference here...
பெண்ணால் இராமன் ஆவதும், இராவணன் ஆவதும் வேறு.
அதை தவிர, நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை, பல முறை இராமன் ஆகிறோம், பல முரை இராவணன் ஆகிறோம். இதை தடுக்க முடியாது, தவிர்க்கவும் முடியாது.
கருத்துரையிடுக