மகனே மகனே என் மகனே
நீ உலகம் போற்றும் மனிதனாவாய்
உன்னை கண்டாலே என் உள்ளம் உருகுதே
உன்னை கண்டாலே என் கண்கள் மயங்குதே
உன் குரலை கேட்கவே என் காது துடிக்குதே
உன் நடையை காணவே என் மனம் ஏங்குதே
உன் சிரிப்பை கண்டாலே கல்லும் கறையுமே
உன் பேச்சை கேட்டாலே இன்பம் பெருகுமே
உன் கோபம் பார்க்கவே நான் கோபம் கொண்டேனே
உன் அழுகை கண்டாலே நான் செத்து போகிறேனே
மகனே மகனே என் மகனே
நீ உலகம் போற்றும் மனிதனாவாய்
இன்பம் பாதி, துன்பம் பாதி இருக்கும் வாழ்க்கை
அது தான் உலக நியதி
இன்பத்தில் வானிற்கு போகாதே
துன்பத்தில் அகல பாதாலத்திற்கு போகாதே
உன் தந்தை போல புகழ் பெற வேண்டும்
உன்னை நம்பி வருவோர்க்கு உதவிட வேண்டும்
ஆசிரியரை தெய்வம் போல் மதித்திடு
உனக்குள் மிருகம் வந்தால் கொன்றிடு
பணத்திற்கு நீ மயங்காதே
பாசத்திற்கு நீ வளையாமல் இருக்காதே
மகனே மகனே என் மகனே
நீ உலகம் போற்றும் மனிதனாவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக