கடவுள் பாதி
மிருகம் பாதி
உண்மை பாதி
பொய்மை பாதி
வெற்றி பாதி
தோல்வி பாதி
இன்பம் பாதி
துன்பம் பாதி
நியாயம் பாதி
அநியாயம் பாதி
நண்பர்கள் பாதி
எதிரிகள் பாதி
பாசம் பாதி
வேஷம் பாதி
உழைப்பு பாதி
உறக்கம் பாதி
நம்பிக்கை இருக்கும் போது கடவுள் அதிகம்
நம்பிக்கை இல்லாத போது மிருகம் அதிகம்
நேர்மை இருக்கும் போது உண்மை அதிகம்
நேர்மை இல்லாத போது பொய்மை அதிகம்
சோர்வில்லாமல் உழைக்கும் போது வெற்றி அதிகம்
சோம்பேறியாய் இருக்கும் போது தோல்வி அதிகம்
ஆசை இல்லாத போது இன்பம் அதிகம்
ஆசை இருக்கும் போது துன்பம் அதிகம்
பணத்தை விரும்பாத போது நியாயம் அதிகம்
பணத்தை விரும்பும் போது அநியாயம் அதிகம்
உண்மையாய் இருக்கும் போது நண்பர்கள் அதிகம்
உண்மையாய் இல்லாத போது எதிரிகள் அதிகம்
வெள்ளை மனது இருக்கும் போது பாசம் அதிகம்
வெள்ளையில் கறை படும் போது வேஷம் அதிகம்
குறிக்கோள் இருக்கும் போது உழைப்பு அதிகம்
குறிக்கோள் இல்லாத போது உறக்கம் அதிகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக