வா வா வா, எழுந்து வா,
தடைகளை உடைத்து எறிந்து வா
தட்டினால் தான் கதவு திறக்கப்படும்
மேகங்கள் முட்டினால் தான் இடி மின்னல் வரும்
பாறையை உளியால் தட்டினால் தான் சிலை வரும்
நீ உன் மூளையை தீட்டினால் தான் வெற்றி வரும்
விலை கொடுத்தால் தான் பொருள் வாங்க முடியும்
தடையை தாண்டினால் தான் விடையை வாங்க முடியும்
உதவி செய்தால் தான் நல்ல பெயரை வாங்க முடியும்
நீ உழைத்தால் தான் வெற்றியை வாங்க முடியும்
காக்கை, குருவி உட்கார்ந்து இருந்தால் உணவு கிடைக்காது
உழவன் உட்கார்ந்து இருந்தால் மக்களுக்கு உணவு கிடைக்காது
நீதி உட்கார்ந்து இருந்தால் நியாயம் கிடைக்காது
அரசன் உட்கார்ந்து இருந்தால் நாட்டில் வளம் கிடைக்காது
நீ உட்கார்ந்து இருந்தால் இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்காது
வா வா வா, எழுந்து வா
தடைகளை உடைத்து எழுந்து வா
வானத்தில் மேகம் நிரந்திரம் இல்லை
ஏரியில் தண்ணீர் நிரந்திரம் இல்லை
பதவி, சொத்து நிரந்திரம் இல்லை
வாழ்க்கை நிரந்திரம் இல்லை
நீ செய்த சாதனை ஒன்றே நிரந்தரம்
அன்பை பொழிவது தாயின் கடமை
பண்பை வளர்ப்பது தந்தையின் கடமை
பயிரை வளர்ப்பது உழவனின் கடமை
இந்தியாவை வல்லரசு ஆக்குவது உன்னுடைய கடமை
வா வா வா, எழுந்து வா,
தடைகளை உடைத்து எழுந்து வா
புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
5 கருத்துகள்:
Super poem da...cool...did you write it?
Thank you. I had written it.
Really an inspirational poem...!!!
very good..but u can remove that line about using alchocol
@Anonymous - Thanks for your comment. I removed that line...
கருத்துரையிடுக