Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு வாழ்த்து!!

பிறக்க போகிறது புது ஆண்டு
லட்சியத்தை நோக்கி வேகமாய் நடைபோடு

வருவதும் போவதும் தான் ஆண்டுகள்
வருவதும் போவதும் தான் மனிதர்கள்

சென்ற மனிதன் நினைக்க படுவான்
அவன் செய்த சாதனைகளால்

சென்ற ஆண்டு நினைக்கப்பட வேண்டும்
அதில் என்ன சாதனை செய்தோம் என்று

வருகிற ஆண்டு நினைக்கப்பட வேண்டும்
அது எப்படி அமைய வேண்டும் என்று

கொண்டாடி மகிழலாம்
புது ஆண்டு பிறப்பதால்

சோகத்திலும் முழுகலாம்
நிகழும் ஆண்டு இறப்பதால்

மகிழ்ச்சியோ சோகமோ
அது சுயநினைவுடன் இருந்திட வேண்டும்

குடித்து விட்டு தன்னை மறந்து
புத்தாண்டை வரவேற்பது தான் நாகரீகமோ?

அமைதியாக இறைவனை பிரார்த்தனை செய்து
புத்தாண்டை வரவேற்பது தான் நம் பண்பாடு

சொல்லி திருந்துபவர்கள் சிலர்
பட்டு திருந்துபவர்கள் சிலர்

நீ எவ்வகையோ
புத்தாண்டு வாழ்த்து சொல்வது என் கடமை

பிறக்க போகிறது புது ஆண்டு
லட்சியத்தை நோக்கி வேகமாய் நடைபோடு

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages