Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 13 டிசம்பர், 2010

உழைப்பவர் என்றும்..

உழைப்பவர் என்றும் உழைக்கிறார்
வெற்றியை நோக்கி அவர் நடக்கிறார்

ஒரு எண்ணம் உருவானது
அதை செயலாக்க
பல வழிகளில் தேடல் நடந்தது

தேடினேன் தேடுகிறேன்
நான் தேடுவேன் அது நடக்கும் வரை

இடையில் வரும் அவமானம்
என் தேடலை வேகப்படுத்தும் மருந்தாகும்

அவமான படாமல் வெற்றி
பெற்றவர் இங்கு எவர் உண்டு?

இந்த விதியை மீறியவர்
மண்ணில் எவர் உண்டு?

நேற்று உன்னை மடையன் என்று சொன்னவன்
இன்று உன்னை புகழ்கிறான்

மடையன் என்று சொன்னவனின் வார்த்தையை
பொய்யாக்க நாம் உழைக்க வேண்டுமே?

ஆத்திர படுவதால் இலக்கை அடைய முடியாது
அமைதியாய் இருப்பதால் உன் இலக்கை யாராலும் தடுக்க முடியாது

உழைப்பவர் என்றும் உழைக்கிறார்
வெற்றியை நோக்கி அவர் நடக்கிறார்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages