வா வா என்று சொல்வதால்
வரப்போவது இல்லை காதல்
என்னை விட்டு போ போ என்று சொல்வதால்
போகபோவதும் இல்லை காதல்
காதல் வருவது எப்போது
காதல் போவது எப்போது என்று தெரிந்தவர் யாரும் இங்கு இல்லை
அதை புரிந்தவர் இவ்வுலகில் இல்லை
காதல் இருக்கும் போது
இனிமையில் தத்தளிக்கும் மனசு
காதல் இல்லாத போது
ஏக்கத்தில் தவிக்கும் மனசு
காதல் இல்லாத உலகம்
அது பெண் இல்லாத உலகம்
பெண் இல்லாத உலகம்
அது என்றும் நரகம்
ஒரு முறையாவது காதலுக்கு
நாம் அடிமையாகி இருப்போம்
அது தந்த இன்ப துன்ப
நிகழ்வுகள் எப்போதும் நமக்குள் இருக்கும்
பல வருடங்கள் கழித்து நினைக்கும் போது
சில சமயம் நம் முகம் மலரும்
சில சமயம் நம் முகம் வாடும்
வா வா என்று சொல்வதால்
வரப்போவது இல்லை காதல்
என்னை விட்டு போ போ என்று சொல்வதால்
போகபோவதும் இல்லை காதல்
வெள்ளி, 10 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக